இந்தியா - அயர்லாந்து போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு... ஏற்பட்டுள்ள சிக்கல்
நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அயர்லாந்துடன் முதல் போட்டியில் நியூயார்க்கின் புறநகர் பகுதியில் பலபரிட்சை நடத்துகின்றது..
நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அயர்லாந்துடன் முதல் போட்டியில் நியூயார்க்கின் புறநகர் பகுதியில் பலபரிட்சை நடத்துகின்றது..
அயர்லாந்து அணி பலம் குன்றி அணியாக கருதப்பட்டாலும், அண்மையில் பாகிஸ்தானை வீழ்த்திளதை மறந்துவிட கூடாது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
நியூயார்க்கின் புறநகர் பகுதி தற்போது மேகமூட்டத்துடன் இருப்பதாகவும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நேரப்படி காலை 10:30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ள நிலையில், 23 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் போட்டியின் இறுதியில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், இதனால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளுவதே சிறந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி டாஸ் வெற்றிக்கொண்டால் விரைவாக அயர்லாந்து அணியை சுருட்டி விட்டு பேட்டிங் செய்யும்போது மீண்டும் குறைந்த பந்துகளில் இலக்கை சேஸ் செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சர்கள் தெரிவித்துள்ளனர்.
மழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்தியா இன்றைய ஆட்டத்தில் தங்களுடைய மூன்று வேகப்பந்துவீச்சாளர்களின் பயன்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.