விரைவில் கேப்டனாகும் ருதுராஜ்? இந்திய அணி 2027 உலகக்கோப்பை வெல்வது உறுதி!

இந்திய அணியின் பயிற்சியாளராக பிளெம்மிங் நியமிக்கப்பட்டால் அவர் ருதுராஜை இந்திய அணியின் கேப்டனாக ஆக்குவார்.

விரைவில் கேப்டனாகும் ருதுராஜ்? இந்திய அணி 2027 உலகக்கோப்பை வெல்வது உறுதி!

2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை ருதுராஜ் தலைமையில் இந்திய அணி வெல்லும் என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ விரும்புவதாக செய்தி வெளியானதை அடுத்து, சம்பந்தமே இல்லாமல் இப்படியான தகவல் பரவி வருகின்றது.

ஸ்டீபன் பிளெம்மிங் சிஎஸ்கே அணி மட்டுமின்றி மேலும் மூன்று டி20 அணிகளின் பயிற்சியாளராக உள்ள நிலையில், இந்த நான்கு அணிகளில் இருந்தும் விலகி, இந்திய அணியின் பயிற்சியாளராக வருவாரா என்பது கேள்விக்கு உரியது.

இந்திய அணியின் பயிற்சியாளராக பிளெம்மிங் நியமிக்கப்பட்டால் அவர் ருதுராஜை இந்திய அணியின் கேப்டனாக ஆக்குவார் என சென்னை அணி ரசிகர்கள் கனவு கண்டு வருகின்றனர். 

அத்துடன், ஸ்டீபன் பிளெம்மிங் பயிற்சியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் எனவும் ஆசைகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஸ்டீபன் பிளெம்மிங் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தாலும் ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்ற அனுபவ வீரர்களை தாண்டி, ருதுராஜ் கெய்க்வாட்டை அணியின் கேப்டனாக ஆக்குவாரா என்றால் சந்தேகமே.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp