இந்திய உத்தேச அணியில் 3 வீரர்களை நீக்கிய ரோஹித்:  இது தான் காரணமா?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை, தயார் செய்துவிட்டதாகவும், மூன்று நட்சத்திர வீரர்களை ரோஹித் சர்மா நீக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய உத்தேச அணியில் 3 வீரர்களை நீக்கிய ரோஹித்:  இது தான் காரணமா?

ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பௌலர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை, தயார் செய்துவிட்டதாகவும், மூன்று நட்சத்திர வீரர்களை ரோஹித் சர்மா நீக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பினிஷர் இடத்திற்கு ரிங்கு சிங்கை தேர்வு செய்ய முடியாது எனவும் மாற்றாக ஷிவம் துபேவை விளையாட வைக்க ரோஹித் சர்மா முடிவு செய்துள்ளாராம். அதற்கு முக்கிய காரணம், ரிங்கு சிங் ஒரு பேட்டராக மட்டுமே இருப்பதுதான்.

மேலும், ரவீந்திர ஜடேஜாவை மட்டும் ஆல்-ரவுண்டராக சேர்த்துவிட்டு அக்சர் படேலுக்கு மாற்றாக குல்தீப் யாதவை விளையாட வைக்க ரோஹித் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்சர் படேல் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

விக்கெட் கீப்பர்கள் இடத்தில் சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகிய மூன்று வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp