நம்ப வைத்து இளம் வீரரை ஏமாற்றிய ரோஹித்... கடைசி வரை வாய்ப்பு இல்லை!

வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 14 வீரர்களுடன் களமிறங்கியது. விராட் கோலிக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டது.

நம்ப வைத்து இளம் வீரரை ஏமாற்றிய ரோஹித்... கடைசி வரை வாய்ப்பு இல்லை!

டி20 உலகக் கோப்பை தொடரின் இந்திய  உத்தேச அணியில் இடம்பெற்ற துவக்க வீரர் ஜெய்ஸ்வாலுக்கு வங்கதேச அணியுடனான பயிற்சிப் போட்டியிலாவது வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

இந்திய அணி துவக்க ஜோடியாக எப்போதும் ஒரு வலது கை பேட்ஸ்மேன் மற்றும் ஒரு இடது கை பேட்ஸ்மேனை பயன்படுத்தும். அந்த வகையில் அவருக்கு  போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என முதலில் கருதப்பட்டது. 

ஆனால், விராட் கோலி இந்திய டி20 அணியில் இடம் பெற்ற பின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை துவக்க வீரர்களாக களம் இறங்கும் வகையில் இந்திய அணி திட்டமிடப்பட்டதால், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டது.

ஹர்திக் பாண்டியாவால் மருத்துவமனைக்கு ஓடிய வீரர்.. நடந்தது என்ன?

இந்த நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 14 வீரர்களுடன் களமிறங்கியது. விராட் கோலிக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்த போட்டியில், துவக்க வீரராக விராட் கோலியின் காலியாக இருந்ததை அடுத்து ஜெய்ஸ்வால்-க்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்ப்பட்ட நிலையில், ரோஹித் சர்மாவுடன், சஞ்சு சாம்சன் துவக்க வீரராக களம் இறங்கியதால், அனைவரையும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஒருவேளை உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டி வந்தால் அப்போது ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற வேண்டிய நிலை ஏற்படும். 

அந்த நோக்கத்திலாவது அவருக்கு பயிற்சிப் போட்டியில் வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் ஆனால், அதையும் கேப்டன் ரோஹித் சர்மா செய்யவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp