இந்தியா அரையிறுதிக்கு நேரடியாக தகுதி? 4 வீரர்களை சேர்க்க காரணம் இதுதான்!

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலும், சூப்பர் 8, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியானது மேற்கிந்தியத் தீவுகளிலும் நடைபெறும்.

இந்தியா அரையிறுதிக்கு நேரடியாக தகுதி? 4 வீரர்களை சேர்க்க காரணம் இதுதான்!

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலும், சூப்பர் 8, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியானது மேற்கிந்தியத் தீவுகளிலும் நடைபெறும்.

இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இந்திய அணியுடன் பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

குரூப் ஏ பிரிவில் இந்திய அணி முதலிடம் பிடிக்கத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியானது, சூப்பர் 8 பிரிவில் விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இரவு 8 மணிக்கு நடக்கும் வகையில் இருக்கிறது.

இந்திய அணியில், 4 ஸ்பின்னர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு, இந்திய ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், சூப்பர் 8, அரையிறுதிப் போட்டிகள் எங்கெங்கு நடக்கப் போகிறது என்பதை தெரிந்துகொண்டுதான், 4 ஸ்பின்னர்களை சேர்த்திருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

லீக் சுற்றில், குரூப் ஏ பிரிவில் இந்தியா முதலிடம் பிடிக்கும் பட்சத்தில், சூப்பர் 8 சுற்றில், இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குதான் துவங்கும். மேற்கிந்தியத் தீவுகள் நேரப்படி காலை 10;30 மணிக்கு ஆரம்பமாகும். இதில்தான் சூட்சமம் இருக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில், தற்போது கோடை காலம்தான். அங்கு காலை 10;30 மணிக்கு எல்லாம், பிட்ச் வறண்டு காணப்படும். இதனால், அங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஸ்பின்னர்கள்தான் முழு ஆதிக்கம் செலுத்துவார்கள்.

இதனால்தான், இந்திய அணியில் 4 ஸ்பின்னர்களை சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம், குரூப் ஏ பிரிவில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல் அரையிறுதிக்கு மட்டுமே, ரிசர்வ் டே இருக்கிறது. இப்போட்டி இரவு 8 மணிக்கு துவங்கும். இரண்டாவது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது. இப்போட்டி, இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு துவங்கும்.

முதல் அரையிறுதிப் போட்டி, மேற்கிந்தியத் தீவுகள் நேரப்படி காலை 10;30 மணிக்கு துவங்கும். இதில் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட முடியும். 

இதனை முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான், இந்தியா 4 ஸ்பின்னர்களை சேர்த்திருப்பதாகவும், இந்தியா முதல் அரையிறுதியில் விளையாடுவது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதுதான் என வெளிநாட்டு கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp