உன் கூடவே இருக்கணும்.. விராட் கோலியை தேடி ஹோட்டலுக்கே சென்ற அனுஷ்கா!
இந்திய வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, இந்திய அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
இந்திய வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, இந்திய அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுவதுடன், இந்த நேரத்தில் அனுஷ்கா சர்மா தன் கணவருடன் தான் இருக்க வேண்டும் என முடிவு செய்து ஹோட்டலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அண்மை காலமாக போட்டிகளுக்கு மத்தியில் இந்திய அணி வீரர்களின் குடும்பத்தினர் ஹோட்டல் அறைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. எனினும், அனுஷ்கா சர்மாவுக்கு சிறப்பு அனுமதி இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.
நடப்பு உலகக்கோப்பை தொடர் துவங்கும் முன்பு அனுஷ்கா சர்மா உடல்நிலையில் சிறய பாதிப்பு ஏற்பட்டதால் விராட் கோலி, அணியில் இருந்து இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு மும்பை சென்றிருந்தார்.
இந்த நிலையில், தீபாவளி தினத்தில் இந்திய அணி, நெதர்லாந்து அணியை பெங்களூரில் எதிர்கொள்கிறது.
அப்போது தன் கணவருடன் இருக்க வேண்டும் என அனுஷ்கா சர்மா பெங்களூரில் இந்திய அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றதுடன், விராட் கோலி அவரை உள்ளே அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதம் என்ற சாதனையை முறியடித்து ஒருநாள் போட்டிகளில் 50 சதம் அடித்து புதிய வரலாறு படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.