ரோஹித் சர்மா டாசில் பிக்சிங் செய்து ஏமாற்றுகின்றார்... பாகிஸ்தான் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு!

அதில் இந்தத் தொடரில் ரோஹித் சர்மா டாசிலே பிக்சிங் செய்து இந்தியாவுக்கு சாதகமாக விளையாடுகிறார். இதற்கு ஐசிசி அதிகாரிகளும் இந்தியாவுக்கு உடந்தையாக செயல்படுகிறார்கள். 

ரோஹித் சர்மா டாசில் பிக்சிங் செய்து ஏமாற்றுகின்றார்... பாகிஸ்தான் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில்,  தொடர் வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாத சிலர் தொடர்ந்து இந்திய அணி மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.

இந்தியாவுக்கு தேவையான வகையில் ஆடுகளங்கள் மாற்றப்படுவாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன்,  இந்தியா பந்து வீசும் போது மட்டும் வேறு ஒரு பந்தை ஐசிசி வழங்குகிறது என்று அண்மையில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இது இவ்வாறு இருக்க, இந்திய அணிக்கு சாதகமாக டாஸ் விழுவது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் சிக்கந்தர் பக்த், பாகிஸ்தானில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சியில் பேசியபோது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கின்றார் வைத்திருக்கிறார். 

அதில் இந்தத் தொடரில் ரோஹித் சர்மா டாசிலே பிக்சிங் செய்து இந்தியாவுக்கு சாதகமாக விளையாடுகிறார். இதற்கு ஐசிசி அதிகாரிகளும் இந்தியாவுக்கு உடந்தையாக செயல்படுகிறார்கள். 

டாஸ் வீசும் போது ரோகித் சர்மா டாசை எதிரணி கேப்டனிடம் இருந்து அதிக தூரம் வீசுகிறார். இதன் மூலம் டாசை எதிரணி கேப்டன் சென்று பார்க்க முடியாது. இதனை பயன்படுத்திக் கொண்டு போட்டி நடுவரும் இந்தியாவுக்கு சாதகமாக டாசை கூறுகிறார்கள் என்று ஒரு பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.

இதனை கேட்டதும் பாகிஸ்தான் டிவி தொகுப்பாளரே சிரிக்கும் நிலை ஏற்பட்டது.

இதேவேளை, அண்மையில் இந்தியாவுக்கு சாதகமாக டிஆர்எஸ் முடிவை மூன்றாம் நடுவர் மாற்றுவதாக பாகிஸ்தான் வீரர் ஹசன் ரசா குற்றச்சாட்டு  முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp