உலகக் கோப்பையை இந்தியா வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்: பிரபல நடிகை அறிவிப்பு
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இறுதி போட்டியில் இந்தியா வென்று உலக கோப்பையை கைப்பற்றினால் நிர்வாணமாக கடற்கரையில் ஓடுவேன் என்று பிரபல நடிகை ஒருவர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் என்பவர் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’உலக கோப்பையை இந்தியா வென்று விட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சுய விளம்பரத்துக்காக வெளியீட்டு இருப்பதாக ரசிகர்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அதை மறுத்துள்ள ரேகா போஜ் ’இந்திய கிரிக்கெட் அணியின் மீதான அன்பு காரணமாக இதை சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து சில ரசிகர்கள் விசாகப்பட்டின கடற்கரையில் 19ஆம் தேதி உங்களை சந்திக்கிறேன் என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே அறிவித்திருந்தார் என்பதும் அதன் பிறகு இந்தியா உலகக் கோப்பையை வென்ற பின்னர் அவர் ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை போலவே ரேகா போஜ் ஏமாற்றுவாரா? அல்லது சொன்ன சொல்லை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.