தாங்க முடியாமல் தானே வெளியேறிய போட்டியாளர்.. அனல் பறக்கும் பிக் பாஸ் வீடு
இதை பலரும் குத்தி பேசுவதால் தாங்கிக் கொள்ளாத வினுஷா தேவி, ‘பேசாம கிளம்பி விடலாம்’ என்று முடிவுக்கு வந்துவிட்டார். இவரும் பவா செல்லத்துரை போலவே உடல் நிலையை தான் காரணமாக சொல்லி வெளியேற பார்க்கிறார்.
பிக் பாஸ் சீசன் 7 துவங்கப்பட்டு மூன்று வாரம் தான் ஆகிறது அதுக்குள்ள ஏகப்பட்ட பிரச்சனைகள் அடுத்தடுத்து நடக்கிறது.
அதுவும் பிக் பாஸ் வீட்டில் மனசில் பட்டதை அப்படியே சொல்லக்கூடிய பிரதீப், கிண்டல் செய்த பெண் போட்டியாளரை முகத்துக்க நேராகவே அவமானப்படுத்தி விட்டார்.
அது மட்டுமல்ல இனிமேல் இந்த வீட்டில் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது என தானாகவே ஒருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என அழுது ஊரைக் கூட்டியதால், பிக்பாஸ் வீடே அனல் பறக்கிறது.
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான வினுஷா தேவி, இப்போ பிக் பாஸ் சீசன் 7ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
ஆனால் இவர் ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த சுவாரசியமான விஷயத்தையும் செய்யவில்லை.
இதை பலரும் குத்தி பேசுவதால் தாங்கிக் கொள்ளாத வினுஷா தேவி, ‘பேசாம கிளம்பி விடலாம்’ என்று முடிவுக்கு வந்துவிட்டார். இவரும் பவா செல்லத்துரை போலவே உடல் நிலையை தான் காரணமாக சொல்லி வெளியேற பார்க்கிறார்.
இவருக்கு சைனஸ் பிரச்சினை இருப்பதாகவும், பிக் பாஸ் வீட்டில் ஏசி இருப்பதால் அது அவருக்கு சுத்தமாகவே சேரவில்லை என்று பிக் பாஸ் இடம் கன்ஸ்க்சன் ரூமில் அழுது கொண்டே சொல்கிறார்.
பிக் பாஸ் வினுஷாவின் சமாதானப்படுத்தி தொடர்ந்து விளையாட சொல்கிறார். அதேசமயம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் வினுஷா இந்த வாரம் போய்விடுவது உறுதி என்று பேசிக்கொள்கின்றனர்.
மேலும் அவர் பிக் பாஸ் இடம் பேசிவிட்டு அப்படியே வீட்டுக்கு சென்று விடுவார் என்றும் மாயா கேலி கிண்டல் செய்கிறார். உடனே பிரதீப், ‘வினிஷாவாவது மூன்று வாரத்துக்கு அப்புறம் தான் வீட்டுக்கு போறேன்னு சொன்னாங்க, ஆனா நீ முதல் வாரத்திலேயே பெட்டியை தூக்கிட்டு கிளம்புன ஆளாச்சே!’ என்று பகிரங்கமாகவே அவமானப்படுத்துகிறார்.
உடனே மாயா எதுவும் பேசாமல் சைலன்டாக வாயை மூடி விட்டார். மேலும் இந்த வார ஓட்டிங் லிஸ்டில் கடைசி மூன்று இடத்தை விஜய் வர்மா, அக்ஷயா, வினுஷா மூன்று பேரும் தான் பெற்றிருக்கின்றனர். இதில் வினுஷா தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார்.