புது குணசேகரன் சொதப்பியதால் தந்திரமாக தூக்கிய எதிர்நீச்சல் டீம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் கடந்த ஒரு மாத காலமாக குணசேகரன் கேரக்டருக்கு புதிதாக யார் வந்து நடிக்கப் போகிறார் என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் கடந்த ஒரு மாத காலமாக குணசேகரன் கேரக்டருக்கு புதிதாக யார் வந்து நடிக்கப் போகிறார் என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் குணசேகரன் கேரக்டருக்கு வேலராமமூர்த்தி மாஸ் என்ட்ரி கொடுத்து நடிக்க வந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் என்னமோ இவருக்கு பிஜிஎம் எல்லாம் போட்டு ரொம்ப தூக்கலாக காட்டி பரபரப்பாக கொண்டு வந்தார்கள். ஆனால் போகப் போக ஒவ்வொரு நாளும் இந்த புது குணசேகரனின் நடவடிக்கைகள், பேச்சு, அடாவடித்தனமான வன்மம் இது எல்லாம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்து எரிச்சல் அடைய வைத்து வருகிறது.
இதனால் இதுவரை டாப்பில் இருந்த எதிர்நீச்சல் சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு சென்று டிஆர்பி ரேட்டிங்கில் அடிப்பட தொடங்கிவிட்டது. முக்கியமாக இந்த புது குணசேகரன் அவருடைய கேரக்டரை மொத்தமாக சொதப்பியதால் நாடகத்திற்கு எதிர்மறையான கமெண்ட்ஸ்கள் வர ஆரம்பித்துவிட்டது.
கொஞ்சம் கூட செட் ஆகவில்லை என்றும், இதுவரை அவர் சேர்த்து வைத்த மொத்த பேரையும் டேமேஜ் செய்யும் அளவிற்கு தான் இவருடைய நடிப்பு இருக்கிறது என்று பலரும் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் எதிர்நீச்சல் டீம் குணசேகரன் கேரக்டரை இப்போதைக்கு பூசி மொழுவி விடலாம் என்று தந்திரமாக ஒரு காரியத்தை செய்திருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் போலீசாரை எட்டி உதைத்ததால், தற்போது இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் போலீசார் குணசேகரன் வீட்டிற்கு வந்து அவரை கைதி பண்ணி கூட்டிட்டு போகிறார்கள்.
அதற்கு காரணம் இவர் தொடர்ந்து நடித்தால் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற பெயரும் டேமேஜ் ஆகிவிடும் என்பதனால் தான். அத்துடன் போகும் போது கதிர் மற்றும் ஞானத்திற்கு எந்த அளவிற்கு பெண்களை அடிமையாக வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு கொம்பு சீவி விட்டு குணசேகரன் போய்விட்டார்.
ஆக மொத்தத்தில் இப்போதைக்கு புது குணசேகரன் வரமாட்டார். அதற்கு பதிலாக இருப்பவர்களை வைத்து நாடகத்தை கரையேற்ற முடிவு எடுத்திருக்கிறார்கள்.