Close

முதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்!

முதல் கணவர் தற்கொலை

முதல் கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகை கர்ப்பமாக உள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி. அந்த சீரியலில் மைனா என்ற கேரக்டரில் நடித்ததால் மைனா நந்தினி என அழைக்கப்பட்டார்.

ஏற்கனவே ஜிம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் நந்தினி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்தார்.

இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் நந்தினியின் கணவர் கார்த்திகேயன் லாட்ஜில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மைனா நந்தினி, சீரியல் நடிகரான யோகேஸ்வரனை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.

இருவரும் அவ்வப்போது டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் மைனா நந்தினி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை மைனா நந்தினி தான் அளித்த பேட்டி ஒன்றிலேயே தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
x
scroll to top