இந்தியா

முதலிரவு ஆசையில் அறைக்குள் நுழைந்த மாப்பிள்ளையை அதிரவைத்த மாணவி

ஆசை ஆசையாக முதலிரவுக்கு ரூமுக்குள் நுழைந்த மாப்பிள்ளை அங்கே கண்ட காட்சியை கண்டு அப்படியே உறைந்து போயுள்ளார்.

கன்னியாகுமரி, தக்கலையை சேர்ந்த கல்லூரி முதலாமாண்டு மாணவிக்கு 17 வயசு ஆகிறது. இவர் சுதீஷ் என்ற இளைஞரை காதலித்துள்ளார்.

இந்த சமயத்தில் ஊரடங்கு போட்டுவிடவும் கல்லூரி மூடப்பட்டது.. சிறுமியும் வீட்டிலேயே இருந்து வந்தநிலையில், காதலர்கள் அலைபேசியில் காதல் வளர்த்துள்ளனர்.

எப்போதுவுமே மகள் அலைபேசியில் இருப்பதை பார்த்ததும் பெற்றோருக்கு சந்தேகம் வந்தது. அப்போதுதான் லவ் மேட்டர் வீட்டிற்கு தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளுக்கு 17 வயசு என்றும் பார்க்கவில்லை, ஊரடங்கு என்றும் பார்க்கவில்லை. டக்குனு சொந்த சாதியில் ஒரு மாப்பிள்ளையை பார்த்து பேசி முடித்தனர்.

காதும் காதும் வெச்ச மாதிரி 2 வீட்டினர் மட்டுமே கலந்து கொண்டு வீட்டுக்குள்ளேயே அந்த கல்யாணத்தை நடத்தியும் முடித்தனர்.. மணமக்களுக்கு முதலிரவுக்கும் தயார் செய்தனர்.

ஏகப்பட்ட கனவுகளுடன் முதலிரவு ரூமுக்குள் நுழைந்தார் மாப்பிள்ளை. அங்கே மனைவி காதலன் சுதீஷூடன் பேசிக் கொண்டிருந்தார்.

யார், என்ன என்று அதை பற்றி கேட்டபோது, சிறுமி அனைத்தையும் சொல்லிவிட்டார். தனக்கு பிடிக்காமல் இந்த கல்யாணத்தை கட்டாயப்படுத்தி செய்து வைத்துவிட்டனர் என்று சொல்லவும் மாப்பிள்ளை ஷாக் ஆகி நின்றார்.

சிறுமி ஒரு கட்டத்தில் அழ ஆரம்பித்துவிடவும் அதற்கு மேல் என்ன செய்வதென்றே தெரியாமல் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார் மாப்பிள்ளை.

அவர் சென்ற உடனேயே சிறுமி, சுதீஷை வீட்டுக்கு வரும்படி சொல்லி உள்ளார். உடனே சுதீஷூம் அந்த ராத்திரி நேரத்திலேயே சிறுமியின் வீட்டு சுவர் ஏறி குதித்து வந்துள்ளார்.

இதை சிறுமியின் தந்தை பார்த்துவிட்டு “உனக்கு இங்கே என்ன வேலை?” என்று கேட்டதற்கு, “உங்க மகள்தான் என்னை வர சொன்னது” என்று சுதீஷ் சொன்னார்.

அத்துடன் அங்கிருந்து கிளம்பி போக முடியாது என்றும் உறுதியாக சொல்லவும் கடைசியில் பொலிஸ் நிலையம் வரை விவகாரம் சென்றது.

இதனால் காவல்துறையினர் சுதீஷை தாக்கி உள்ளனர். இதை பார்த்த பதறிய சிறுமி, காதலனை காப்பாற்றுவதற்காக தனக்கு 17 வயதே ஆவதால் கட்டாயப்படுத்தி வீட்டில் திருமணம் செய்துவிட்டதாக காவல்துறையில் சொல்லிட்டார்.

இந்த விஷயம் காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுக்க சிறுமியின் பெற்றோர், மாப்பிள்ளை, மணமகன் வீட்டார் என அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அதற்குள் குடும்பத்தில் இருந்த மொத்த பேரும் எஸ்கேப் ஆகிவிட்டனர். அவர்கள் 6 பேரையும் தற்போது காவல்துறையினர் தேடி வருகிறார்கள்..

அதேபோல, காதலனுடன் எப்படியும் தன்னை அனுப்பி வைத்துவிடுவார்கள் என்று நம்பி பெற்றோரையே காவல்துறையில் சிக்க வைத்தும், சிறுமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது..

இப்போது கணவனும் இல்லை.. காதலனும் இல்லாமல் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close