வெற்றிலை

வெற்றிலை போடுபவர்களுக்கு இனி இந்த கோவிலில் அனுமதி கிடையாது!

ஒரிசாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது.

இக்கோயிலில் நடக்கும் தேரோட்டத்தை காண பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இப்படி புகழ் வாய்ந்த இக்கோயிலில் உள்ள சுவர்களில் ஆங்காங்கே வெற்றிலைச எச்சில் காணப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் ஒடிசாவில் உள்ள மக்கள் அதிகமாக வெற்றிலை , புகையிலை , பாக்கு மெல்லும் பழக்கம் உள்ளவர்கள்.

அவர்கள் கோவில் சுவர் என்று கூட பார்க்காமல் எச்சில் துப்பி வைக்கின்றனர். இதை தடுக்க கோவில் நிர்வாகம் ஒரு முடிவு செய்துள்ளது.

வெற்றிலை, பாக்கு ,புகையிலை போடுபவர்கள் கோயில் அனுமதிக்கக் கூடாது என கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.