அணிக்குள் வரும் புதிய வீரர்... சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்!
சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் தோல்வியடைய பிளேயிங் லெவனில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களே காரணம் என்று கூறப்படுகின்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கின்றது.
இதன் காரணமாக, அடுத்த 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வெற்றிப் பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் தோல்வியடைய பிளேயிங் லெவனில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களே காரணம் என்று கூறப்படுகின்றது.
கடந்த சீசனில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் பிளேயிங் லெவனை கேப்டன் தோனி அதிகமாக மாற்றவில்லை. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்றதில் இருந்து சரியான பிளேயிங் லெவனை கண்டறிய முடியாமல் திண்டாடி வருகின்றார்.
சிஎஸ்கே அணியில் தோனிக்கு முக்கிய பதவி... ஓய்வுக்கு பிறகு நடக்கவுள்ள ட்விஸ்ட்!
சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட முஸ்தஃபிசுர் ரஹ்மான், கடந்த சில போட்டிகளில் மோசமாக ஆடுகின்றார்.
கடந்த சீசனில் தீக்சன மீது விமர்சனங்கள் வந்தாலும், அவரை கடைசி வரை தோனி பிளேயிங் லெவனில் இருந்து நீக்கவில்லை.
இதனால் அடுத்த போட்டியில் முஸ்தாஃபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக தீக்சனவை கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவர் பிளே ஓவர்களில் தீபக் சஹர் மற்றும் தீக்சன இருவரும் பந்து வீசும் போது நிச்சயம் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்றும், டெத் ஓவர்களில் பதிரான மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளாக கூறப்படுகின்றது.