டி20 உலகக் கோப்பையில் இந்த நட்சத்திர வீரர்களுக்கு இடமே இல்லை.. ரசிகர்கள் ஷாக்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில் நடப்பு ஏப்ரல் மாத கடைசியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் கூறப்படுகிறது. 

டி20 உலகக் கோப்பையில் இந்த நட்சத்திர வீரர்களுக்கு இடமே இல்லை.. ரசிகர்கள் ஷாக்!

ஐபிஎல் லீக் தொடரின் 17ஆவது சீசன் 13 நகரங்களில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் மோதும் இந்த டி20 திருவிழா, ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் நடைபெறுவதால் இம்முறை அதிக எதிர்பார்ப்பு ஐபிஎல் மீது எழுந்துள்ளது. 

எனவே, டி20 உலகக் கோப்பைக்கு நீங்கள் தகுதிபெற  ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். 

குறிப்பாக, 2022ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றிருந்தார்.

இந்த முறையும் நடப்பு ஐபிஎல் தொடர் வரும் மே 26ஆம் தேதி நிறைவடையும் நிலையில், ஜூன் 1ஆம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. 

இதில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில் நடப்பு ஏப்ரல் மாத கடைசியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் கூறப்படுகிறது. 

இந்திய டி20 அணி கடந்த இரு ஆண்டுகளாகவே உருப்பெற்று வந்தாலும், நடப்பு சீசனில் பார்மில் இருப்பவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படலாம். மேலும் ஒவ்வொரு கிரிக்கெட் வல்லுநர்களும் இந்திய அணிக்கான வீரர்களை பரிந்துரை செய்து வருகின்றனர். 

குறிப்பாக, யாரை அணியில் சேர்க்க வேண்டும் என்பது மட்டுமின்றி யாருக்கு வாய்ப்பில்லை என்பதும் அவர்களின் பரிந்துரை மூலம் தெரிந்துகொள்ளலாம். 

அந்த வகையில், இந்திய அணியின் மூத்த வீரர் வெங்கடேஷ் பிரசாத் அவரது X பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவில்,"சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிவம் தூபே கொண்டுள்ள அதிரடி திறனுக்காக அவர் இருப்பார். சிறந்த டி20 சர்வதேச பேட்டர் என்பதால் சூர்யகுமார் யாதவ் இருப்பார். ரிங்கு சிங் அவரது விதிவிலக்கான ஃபினிஷிங் திறனுக்காக அணியில் இருப்பார். 

டி20 உலகக்கோப்பையில் பிளேயிங் பேரில் இந்த 3 பேரையும் காம்பினேஷனுக்குள் இந்தியா கொண்டுவர ஒரு வழியைக் கண்டடைந்தால் நன்றாக இருக்கும். விராட் மற்றும் ரோஹித் அணியில் இருக்கும்பட்சத்தில் இன்னும ஒரு கீப்பர் பேட்ஸ்மேனுக்கு மட்டுமே இடம் இருக்கும். இது எப்படி செல்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக  இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

15 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி.. ஏற்பட்டுள்ள ட்விஸ்ட்... வெளியான விவரம் இதோ!

இதில் கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பெயர் இல்லை.  அதாவது, கே.எல். ராகுல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்றாலும் அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் கேள்விக்குறியாக உள்ளது. 

இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா ஆகியோரிடையேவே அதிக போட்டி இருக்கும் சூழலில், ரிஷப் பண்ட் நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார் என கூறப்படுவதால் இவர்களே அணியில் பேக்-அப்பாகதான் இருப்பார்கள். எனவே, ராகுலுக்கு இடமளிக்க வாய்ப்பில்லை. 

மிடில் ஆர்டரில், சூர்யகுமார், சிவம் தூபே, ரிங்கு சிங், ரிஷப் பண்ட் ஆகியோர் இருக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு தற்போதைய சூழலில் வாய்ப்பே இல்லை எனலாம். 

ஆனால், ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு பலம் சேர்ப்பார். அவர் பந்துவீசும்பட்சத்தில்  கூடுதல் சிறப்பு. இன்றைய சூழலில், ஜித்தேஷ் சர்மா, கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் ஆகியோருக்கு டி20 உலகக் கோப்பைக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...