தேர்தலை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல – குமார வெல்கம

79
குமார வெல்கம
colombotamil.lk

கடந்த 70 வருடங்களாக அரசியல்வாதிகளே நாட்டை அழித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், குமார வெல்கம, குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், நாடாளுன்ற உறுப்பினர் குமார வெல்கம, இதனை கூறியுள்ளார்.

அத்துடன், நாடு தற்போது இருக்கும் நிலையில் உடனடி தேர்தல் தொடர்பில் கதைப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒலிவாங்கியை கையில் எடுத்தவுடன் தேர்தல் தொடர்பில் கதைக்கும் அரசியல்வாதிகளிடம் தேர்தலை நடத்தக்கூடிய சூழலொன்று நாட்டில் தற்போது காணப்படுகின்றதா என்று நான் கேட்க விரும்புகின்றேன்.

உடனடியாக தேர்தலை நடத்த வேண்டியதற்காக தேவை என்ன? ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது.

ஆறு மாதங்களில் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய பிரச்சினைகளை தீர்த்துகொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு எம்மால் செல்ல முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.