ரஷ்ய அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்

இதயும் பாருங்க

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...

முஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும்...

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...

ரஷ்ய அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8ஆம் திகதி நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனை கண்டித்தும், தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் கடந்த மாத மத்தியில் மாஸ்கோ நகர மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

எதிர்க்கட்சியினர் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த போராட்டத்தை பொலிஸார் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கினர்.

அங்கீகரிக்கப்படாத பேரணியில் ஈடுபட்டதாக கூறி சுமார் 1,500 பேரை பொலிஸார் கைது செய்தனர். அவர்களில் பலர் விடுவிக்கப்பட்ட போதும், ஒரு சிலரை தேர்தல் முடியும் வரை சிறையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அரசின் இந்த ஒடுக்கு முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, ஆகஸ்டு 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மட்டும் மக்கள் அமைதி பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் நடந்த அங்கீகரிக்கப்பட்ட போராட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதால் மாஸ்கோ நகரத்தின் மத்திய பகுதி குலுங்கியது. போராட்டத்தின்போது அங்கு மழை பெய்தது.

ஆனாலும் போராட்டக்காரர்கள் அதனை பொருட்படுத்தாமல் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட போராட்டம் என்றபோதிலும், போராட்டக்காரர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 130-க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது புதுசு

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...

More Articles Like This