இந்திய அணியின் சோலியை முடித்த மூன்று முடிவுகள்... குமுறும் ரசிகர்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.

இந்திய அணியின் சோலியை முடித்த மூன்று முடிவுகள்... குமுறும் ரசிகர்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்கள் எடுத்தது.  தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்துள்ள இந்திய அணி முக்கியமான ஏழு விக்கெட்டுகளை இழந்து வெறும் 219 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது. 

நான்காவதாக இந்திய அணி பேட்டிங் செய்யும்பொழுது இந்த ஆடுகளம் இன்னும் மிக மோசமாக இருக்கும். எனவே இருநூறு ரன்களை துரத்துவதே கடினமாக அமையும். 

இதன் காரணமாக இந்திய அணி இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை விட மிகவும் பின்தங்கி கீழே இருப்பதாக பார்க்கப்படுகின்றது.

ஜெய்ஸ்வால் அரை சதம் அடிக்க இரண்டாவது விக்கெட்டுக்கு அவருடன் இணைந்து விளையாடிய சுப்மன் கில் சிறப்பாக விளையாடிய போதும், சோயப் பஷீர் பந்தில் 38 ரன்களில் எல்பி டபிள்யு ஆனார். 

அடுத்து களம் இறங்கிய ரஜத் பட்டிதார் 17 ரன்கள் எடுத்து நல்ல முறையில் தெரிந்தால். ஆனால் இவருக்கு வழங்கப்பட்ட எல் பிடபிள்யூ-ம் அம்பயர்-காலாகவே வந்தது.

கடைசி பேட்டிங் ஜோடியாக ஜூரல் உடன் இணைந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் இதே போல் அம்பயர்-காலில் எல்பிடபிள்யு தரப்பட்டது. 

இன்று இந்திய அணிக்கு அம்பயரின் இந்த மூன்று முடிவுகளும் பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. ஆனாலும் இந்திய அணியின் தரப்பில் எந்த விதமான விமர்சனங்களும் அம்பயரின் முடிவு மீது இல்லை.

மூன்றாவது டெஸ்டில் இப்படியான இரண்டு முடிவுகள் அம்பயரிடம் வந்த பொழுது, அம்பயர்-கால் என்பதை இருக்கக் கூடாது என்று இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் விமர்சனம் செய்திருந்தார். 

ஆனால், இந்திய அணியோ விதிகளுக்கு உட்பட்டு அது குறித்து எதையுமே சொல்லவில்லை என்பது குறிப்பித்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp