இன்றைய ராசிபலன் – 13 அக்டோபர் 2023 - Today Rasi Palan
இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2023. Today Rasi Palan for Thursday, October 13th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது Colomboதமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2023.
சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 10.40 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. இன்று பிற்பகல் மாலை 03.47 வரை உத்திரம். பின்னர் அஸ்தம். சதயம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷம்
அமைதியாக இருந்து செயல்படுவதன் மூலம் நல்ல பலன்களை பெறுவீர்கள். இடுப்பு எலும்பு தேய்மான நோய்க்காக மருத்துவ ஆலோசனை பெறுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கை அதிகரிக்க முயற்சி எடுப்பீர்கள். எதையும் யோசிக்காமல் பேசாதீர்கள், யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடக்க தவறாதீர்கள்.
ரிஷபம்
குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பீர்கள். மனைவியின் பேச்சால் மனநிம்மதி இழப்பீர்கள். வியாபாரத்திற்கு தேவையான புதிய ஆர்டர்களை பெறுவதில் சிரமப்படுவீர்கள். பெரிய மனிதர்கள் ஆதரவால் சில பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். தலைவலிக்காக கண்ணாடி அணிவீர்கள்.
மிதுனம்
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி போடுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தின் நலனுக்காக இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வீர்கள். அரசு ஊழியர்கள் அனுகூலம் அடைவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில், கட்டுமானத்துறை, கமிஷன் வியாபாரம் போன்றவற்றில் அதிக லாபம் பார்ப்பீர்கள். கடன்களை அடைப்பீர்கள்.
கடகம்
சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பீர்கள். சிறிய முதலீட்டில் அதிக லாபம் அடைவீர்கள். அந்நிய நாட்டிலிருந்து எதிர்பார்த்த உதவிகளை தாமதமாக பெறுவீர்கள். சகோதர உறவுகள் தரும் தொல்லையால் தூக்கத்தை இழப்பீர்கள். வியாபாரப் போட்டியாளர்களை சமாளிக்க புதிய வியூகம் அமைப்பீர்கள். மனதிற்கு இதமாக காதலி நடந்து கொள்வார்.
சிம்மம்
வியாபாரத்தில் நல்ல லாபத்தை பார்ப்பீர்கள். தொழிலை வெற்றிகரமாக நடத்துவீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் அனுகூலமான பலனை பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் வாக்குக்கு நல்ல மரியாதையை தேடுவீர்கள். பெண்கள் உங்கள் மனதைப் புரிந்து கொண்டு நடப்பார்கள். பிள்ளைகள் கல்வியில் தேர்ச்சி பெற்று பெருமை சேர்ப்பார்கள். எதிர்ப்புகளை தாண்டி வருவீர்கள்.
கன்னி
அதிகமாக ஆசைப்படாதீர்கள். குழம்பிய மனதில் நிம்மதி இருக்காது. அடுத்தவர் பேச்சைக் கேட்டு கைப்பொருளை இழந்துவிடாதீர்கள். ஃபைனான்ஸ் கம்பெனிகளில் பணம் செலுத்தாதீர்கள். ஒப்பந்தங்களில் படித்துப் பார்த்து கையெழுத்து போட தவறாதீர்கள். உடன் இருப்பவர்களே வியாபாரத்தைக் கொடுக்க நினைப்பார்கள். கோபத்தால் வேலையை விட்டு விடாதீர்கள்.
துலாம்
கடல் கடந்து செல்வீர்கள். லாபத்தோடு இந்தப் பிரிவை ஏற்படுத்துவீர்கள். தக்க நேரத்தில் ஒருவருக்கு உதவி செய்வீர்கள். ஆனால் திரும்ப கிடைக்க தாமதமானதால் தடுமாறுவீர்கள். நேரம் பாதகமாக இருந்தால் ஓட்டும் வண்டிகூட உங்களுக்கு எதிரியாக மாரி இடையூறை சந்திப்பீர்கள். பேசுவதாக சொல்லி பெயரை கெடுத்துக் கொள்வீர்கள். காதலியின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.
விருச்சிகம்
எதிர்காலம் பற்றிய கவலையால் தூக்கத்தை இழப்பீர்கள். அதற்காக பணத்தை சேர்க்கச் திட்டமிடுவீர்கள். வாங்கிப்போட்ட நிலத்தை விற்று தொழிலில் முதலீடு செய்வீர்கள். அரசு ஊழியர்கள் இடமாற்றமும் சம்பள உயர்வும் பெறுவீர்கள். உழைப்பைப் பாராட்டி முதலாளிகள் பரிசு வழங்குவார்கள். வீட்டைப் புதுப்பிக்கும் வேலையை ஆரம்பிப்பீர்கள்.
தனுசு
ஒதுங்கிப் போனவர்கள் தேடி வந்து உறவாடுவார்கள். சஞ்சலப்பட்ட மனத்தோடு இருந்த நீங்கள் பெரியோர்களின் சந்திப்பால் தெளிவடைவீர்கள். கடந்த கால கசப்பான சம்பவங்களால் பாடம் கற்றுக் கொள்வீர்கள். தொழிலுக்குத் தேவை இல்லாத அம்சங்களை விலக்கி விடுவீர்கள். சகோதரிக்கு திருமண ஏற்பாடுகளை செய்வீர்கள்.
மகரம்
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையாக உழைப்பீர்கள். உடைந்து போன உறவுகளை ஒட்ட வைப்பீர்கள். கூட்டாக தொழில் செய்ய ஒப்பந்தம் போடுவீர்கள். வியாபாரத்திற்கு தேவையான லைசென்சை பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகளை விலக்குவீர்கள்.
கும்பம்
வியாபாரத்திற்கு பணம் புரட்ட தடுமாறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காமல் சங்கடப்படுவீர்கள். பைனான்ஸ் கம்பெனியில் எச்சரிக்கையாக நடப்பீர்கள்.. வெளிமாநிலம் செல்ல ஏற்பாடு செய்வீர்கள். விருப்பம் இல்லாத வேலைக்காக இடம் மாறிச் செல்வீர்கள். சந்திராஷ்டமம் நாள். எச்சரிக்கையாக இருங்கள்.
மீனம்
குடும்பத்தில் இருந்த இறுக்க நிலையை மாற்றி கலகலப்பை உண்டு பண்ணுவீர்கள். பிள்ளைகளைப் பற்றிய பெரிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், கமிஷன் வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். முடிக்க முடியாத பணியைச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். பலசரக்கு வியாபாரத்தில் அதிக முன்னேற்றம் காண்பீர்கள்.