அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான தகவல்
அமெரிக்க டொலரின் பெறுமதி: அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று(23) சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று(23) சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.54 ரூபாயாகவும், கொள்வனவு விலை 299.29 ரூபாயாகவும் காணப்படுகின்றது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 225.65 ரூபாயாகவும் கொள்வனவு விலை 215.91 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 337.82 ரூபாயாகவும் கொள்வனவு பெறுமதி 324.05 ரூபாயாகவும் காணப்படுகின்றது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 400.48 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 385.36 ரூபாயாகவும் மாற்றமடைந்துள்ளது.