ஐசிசி உலக கோப்பை 2023 - அடுத்த சூப்பர் ஸ்டார்களாக வர வாய்ப்புள்ள 5 இளம் வீரர்களை கவனித்தீர்களா?
ஐசிசி உலக கோப்பை 2023: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பாபர் அசாம் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள் இந்த உலகக் கோப்பை தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
ஐசிசி உலக கோப்பை 2023: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பாபர் அசாம் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள் இந்த உலகக் கோப்பை தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் அடுத்த தலைமுறையில் ஜொலிக்க போகும் 5 வீரர்களுக்கு கிடைத்த மாபெரும் மேடையாக இந்த உலகக் கோப்பை தொடர் பார்க்கப்படுகிறது.
இதில் டாப் 5 இடத்தில் இருக்கும் வளரும் வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த உலக கோப்பையில் அனைவரும் கவனத்தையும் ஈர்க்கப் போவது இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரானா தான்.
ஐபிஎல் தொடரில் ஏற்கனவே தன்னுடைய திறமையை நிரூபித்த பதிராண இம்முறை உலகக் கோப்பையில் மலிங்கவின் இடத்தை பிடிப்பார் என இலங்கை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 20 வயதே ஆன பதிராணா ஆசிய கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.
இதனால் உலககோப்பை தொடரிலும் பதிராணா சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் கெஸ் அட்கிம்சன் அனைவரின் கவனத்தையும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஐசிசி உலக கோப்பை 2023 - பட்டையை கிளப்பவுள்ள 5 வேகப்பந்துவீச்சாளர்கள் இவர்கள்தான்!
ஆனால் அட்கின்சன் நடப்பு ஆண்டில் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்தில் தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார். மணிக்கு 145 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் கஸ் அட்கின்சன் பந்து வீசுவார். இந்த உலகக் கோப்பையில் அவர் ஸ்டார் அந்தஸ்தை பெற வாய்ப்பு இருக்கிறது.
இதேபோன்று நெதர்லாந்து சேர்ந்த தேஜா நெட்மனாரு என்ற வீரர் அனைவரின் கவனத்தையும் இம்முறை ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் பிறந்த தேஜா தற்போது நெதர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கடந்த ஆண்டு 76 பந்துகளில் 111 ரன்கள் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் இம்முறை உலகக் கோப்பையில் அவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போன்று வங்கதேச அணியின் தொடக்க வீரராக களமிறங்கியுள்ள தவ்ஹீத் ஹிர்தாய் இந்த உலகக் கோப்பையில் கவனத்தை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
U19 உலக கோப்பையில் தன்னுடைய திறமையில் நிரூபித்த தவ்ஹீத்துக்கு இம்முறை உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவரை விளையாடிய 17 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தவ்ஹீத் ஐந்து முறை அரை சதம் கடந்திருக்கிறார்.
மேலும் t20 உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். பயிற்சி ஆட்டத்தில் கூட தவ்ஹீத் 80 ரன்கள் அடித்தார். இதனால் இந்த உலகக் கோப்பையில் தன்னுடைய திறமையை அவர் நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் யாருமே இடம் பெறாததற்கு காரணம் நமது அணியில் இடம்பெற்றுள்ள அனைவருமே சூப்பர் ஸ்டார் வீரர்கள் தான். திலக் வர்மா உலக கோப்பையில் இடம் பெற்றிருந்தால் நிச்சயம் அவர் இந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பார்.