எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, காலி முகத்திடலை நோக்கிச் செல்லும் லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.