கிரிக்கெட் பார்க்க போனது ஒரு குத்தமா?.. நடிகைக்கு நேர்ந்த சோகம்
சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் 2013ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. அதனையடுத்து கன்னடத்தில் மிஸ்டர் ஐரவாதா என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் 2013ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. அதனையடுத்து கன்னடத்தில் மிஸ்டர் ஐரவாதா என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
பிறகு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிவிட்டார். அவரது நடனத்துக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு இருந்ததால் அவரை பாடலுக்கு புக் செய்வதற்கே தயாரிப்பாளர்களும் விரும்புகின்றனர்.
இதற்கிடையே லெஜண்ட் அண்ணாச்சி சரவணன் நடித்த 'லெஜண்ட்'படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக என் ட்ரி கொடுத்தார் ஊர்வசி ரவுத்தேலா.
இந்தப் படத்துக்காக அவருக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் படத்தின் கதையும், மற்ற சில விஷயங்களும் வீக்காக இருந்ததால் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் ஊர்வசி ரவுத்தேலாவும் கண்டுகொள்ளப்படாமல் போனார்.
இந்த சூழலில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடந்தது. உச்சக்கட்ட எதிர்பார்ப்போடு நடந்த இந்த மேட்ச்சில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த போட்டியை பார்ப்பதற்கு அமித் ஷா உள்ளிட்டோர் மைதானத்துக்கு வந்திருந்தனர். அந்த வகையில் நடிகை ஊர்வசி ரவுத்தாலாவும் மேட்ச் பார்க்க சென்றிருந்தார்.
இந்நிலையில் அகமதாபாத் கிரவுண்டில் நடிகை ஊர்வசி ரவுத்தாலாவுக்கு சோகமான நிகழ்வு ஒன்று அரங்கேறியிருக்கிறது. அதாவது அவரது தங்கத்திலான ஐஃபோன் தொலைந்திருக்கிறது.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் எனது ஒரிஜினலான 24 கேரட் தங்கத்திலான ஐஃபோன் தொலைந்துவிட்டது.
யாரேனும் வைத்திருந்தால் முடிந்த அளவு விரைவாக என்னை தொடர்புகொள்ளுங்கள்" என குறிப்பிட்டு ஃபோன் தொலைந்தது தொடர்பாக காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் நகலையும் பகிர்ந்திருக்கிறார்.
அவரது இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் ஏன் யா மேட்ச் பார்க்க போனது ஒரு குத்தமாய்யா என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.