பிக்பாஸ் நிகழ்ச்சி விளையாட்டு ஷோ என நினைத்து இதுவரை ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வந்தனர்.

வனிதாவின் ரீஎண்ட்ரிக்கு பின்னர் பிக்பாஸ் வீட்டில் பெரும் மாறுதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதையும் ஓப்பனாக வெளிப்படையாக அதே நேரத்தில் போல்டாக பேசும் வனிதா, சேரன் உள்பட யாரையும் விட்டுவைக்கவிலை. அப்பா, மகள் பாசம் வேண்டும் என்றால் வீட்டை விட்டு வெளியே போய் பாசத்தை காமியுங்கள்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை சுயநலத்துடனும் போட்டி, பொறாமையுடனும் இருக்க வேண்டும். ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே இருக்க வேண்டும். அப்பா, மகள், அண்ணன், தங்கை, காதல் எல்லாம் வெளியே வைத்து கொள்ளுங்கள்’ என்று வெளுத்து வாங்கினார்.

மேலும் ஷெரினிடம் ‘உன்னை யார் புகழ்கின்றார்களோ அவர்கள் தான் உனது முதல் எதிரி என்றும், உனக்கு எதிர்ப்பு இருக்கும் வரை பிரச்சனை இல்லை ஆனால், உன்னை பாராட்ட தொடங்கிவிட்டால் நீ ஆபத்தை நெருங்கிவிட்டாய் என்று வனிதா கூறியது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி ஒவ்வொருவருக்குமான பாடமாக இருந்தது.

மற்றவர்கள் போட்ட பிச்சையா உனக்கு வேண்டும்? நீ கஷ்டப்பட்டு ஜெயிச்சு டைட்டில் பட்டம் வாங்கணும். அப்பத்தான் உனக்கு பெருமை! என்று தர்ஷனுக்கு அறிவுரை கூறுவதில் ஆகட்டும், முகன் – அபிராமி காதலில் முகன் மீதுள்ள தவறை சுட்டிக்காட்டுவதில் ஆகட்டும், பெண்ணின் கண்ணீருக்கு மதிப்பில்லாமல் செய்துவிடாதே என அபிராமியை கண்டிப்பதில் ஆகட்டும், லாஸ்லியாவை ஃபிராடு என்று கூறுவதில் ஆகட்டும் நேற்றைய வனிதாவின் கால்மணி நேர பேச்சு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமாக அமைந்தது.

இப்படிப்பட்ட ஒரு போட்டியாளரை பார்வையாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றியது வனிதாவுக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. பார்வையாளர்களுக்கே மிகப்பெரிய நஷ்டம் என்பது இப்போது புரிய வருகிறது.