5 விக்கெட் வீழ்த்தி தமிழக வீரர் அதிரடி... நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், துணை கேப்டன் கில் இரண்டு ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

5 விக்கெட் வீழ்த்தி தமிழக வீரர் அதிரடி... நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, அபார வெற்றியை பதிவு செய்து உள்ளதுடன், அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. 

கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், துணை கேப்டன் கில் இரண்டு ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இதன்போத, இந்திய அணி 30 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ், அக்சர் பட்டேல் அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

அக்சர் பட்டேல் 42 ரன்களில் ஆட்டமிழக்க ஸ்ரேயாஸ் ஐயர் 98 பந்துகளில் 79 ரன்கள் எடுக்க கே எல் ராகுல் 23 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 ரன்கள் எடுக்க 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 250 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா ஆறு ரன்களில் வெளியேற வில் யங் 22 ரன்களில் ஆட்டம் இழக்க, டேரல் மிட்செல் 17 ரன்களிலும் டாம் லாத்தம் 14 ரன்களிலும் வெளியேறினார்.

கிளன் பிலிப்ஸ் 12 ரன்களிலும், பிரேஸ்வெல் இரண்டு ரன்களிலும் ஆட்டம் இழந்த நிலையில், கடைசிவரை நின்ற நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

கேப்டன் மிட்செல் சாட்னர் 28 ரன்கள் எடுக்க 45.3 ஓவரில் நியூசிலாந்து அணி 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.