Vidaamuyarchi Review: விடாமுயற்சி படம் எப்படி இருக்கு.. விடாமுயற்சி விமர்சனம்!
Vidaamuyarchi Review: நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இன்று (பிப்ரவரி 6) வெளியாகி உள்ளது.

Vidaamuyarchi Review
நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இன்று (பிப்ரவரி 6) வெளியாகி உள்ளது.
வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்துடன் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி அமைத்துள்ளதுடன், என்னை அறிந்தால் படத்துக்கு பிறகு அஜித் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
அத்துடன், கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து அஜித் படம் வெளியாவதால் ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1000 திரைகளில் இப்படம் திரைக்கு வருகிறது. கடந்த ஞாயிறன்று இப்படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது விடாமுயற்சி படத்துக்கு சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. படம் வெளியாகும் முதல் நாளில் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகளில் படத்தை திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விடாமுயற்சி விமர்சனம்
அர்ஜுன் (அஜித்) , கயல் (திரிஷா) ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருக்கும் கணவர் மனைவியாக இருந்து வருகின்றனர். இருவரும் ஒரு நாள் ஒரு நீண்ட பயணம் செல்லும் போது இவர்களின் கார் பாலைவனத்திற்கு நடுவே நின்று விடுகிறது.
அப்போது ட்ரக்கில் ரக்ஷித் (அர்ஜுன்)வருகிறார். அவர் இருவருக்கும் உதவி செய்ய முன் வருகிறார். இதனால் திரிஷாவை அவரது வாகனத்தில் அஜித் ஏற்றி அனுப்பிவிடுகிறார்.
தனது மனைவியை அழைத்து சென்ற பின்னர் அவர் அவரின் ட்ராக்கில் திரிஷாவை ரக்ஷித் (அர்ஜுன்) மீண்டும் வந்து தன்னையும் அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் திரும்பி வராததால் தனது மனைவியை தேடி செல்கிறார் அர்ஜுன் (அஜித்). அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
இந்தக் கதை ஹாலிவுட் வெளியான பிரேக் டவுன் படத்தின் ரீமேக் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் அந்த படத்தை பார்த்தேன் ரசிகர்களுக்கு விடாமுயற்சி படம் எந்த அளவிற்கு மாறுபட்டு இருக்கிறது என்பது நிச்சயம் புரியும். மாஸ் என்ட்ரி, மாஸ் இடைவேளை காட்சி, ஹீரோ பில்ட்டப், பஞ்ச் டயலாக் என்று எதுவுமே இல்லாமல் வெறும் கதையை மட்டும் நம்பி இந்த படத்தில் அஜித் நடித்திருக்கிறார்.
"விடாமுயற்சி" அஜித்தின் ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. எக்கச்சக்க மாஸ் மசாலா எலிமென்ட்ஸ் இல்லாமல், கதையை நம்பி சென்று ஒரு தரமான திரில்லர் அனுபவமாக இது மாறியுள்ளது. முதல் பாதி அழகான படமாகவும், இரண்டாம் பாதி திரில்லர் ட்விஸ்ட்களுடன் மாஸாகவும் இருக்கும். மகிழ் திருமேனி தனது ஸ்டைலில் உண்மையான தரமான ஒரு கதையை வழங்கியிருக்கிறார்.
✅ முன்னிலை:
- அஜித்தின் பரிணாமமான நடிப்பு
- அர்ஜுன், ரெஜீனா, ஆரவ் ஆகியோரின் கதாபாத்திர முக்கியத்துவம்
- திரைக்கதை, ஒளிப்பதிவு, BGM
❌ குறை:
- சில இடங்களில் சப்டைட்டில்கள் கவனம் சிதறச் செய்யலாம்
- ரெஜீனாவின் பின்னணி கதை நீளமாகி இருப்பது
- பரபரப்பற்ற முதல் பாதி
மொத்தத்தில், வழக்கமான மாஸ் படங்களை விட வித்தியாசமான திரில்லர் அனுபவம் தேடும் ரசிகர்களுக்கு "விடாமுயற்சி" ஒரு அருமையான அனுபவமாக இருக்கும்!