மறைந்த மகளை நினைத்து கதறும் விஜய் ஆண்டனியின் மனைவி!
இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் விஜய் ஆண்டனி.
இவர் சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ்த் திரைப்பட உலகுக்கு அறிமுகமானார். புதுவிதமான ஒலிகள், ஆட்டம்போட வைக்கும் மெட்டுகள் போட்டு ரசிகர்களைக் கவர்ந்தார்.
இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நான் படத்தில் கதாநாயகனாக நடித்து நடிகராக மாறினார். இதைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, பிச்சைக்காரன் திமிரு புடிச்சவன் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டின் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மறைவு திரைத்துறையினரை மட்டுமில்லாமல் பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
தேனாம்பேட்டை போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், கடந்த சில நாட்களாக இதற்காக அவர் மருந்து எடுத்துக்கொண்டதாகவும் செல்லப்படுகிறது.
மகள் இறந்து பத்து நாட்களிலேயே மீளமுடியாது சோகத்தில் இருந்த போதும், அதை மனதில் புதைத்துக்கொண்டு ரத்தம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். கடந்த வாரம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மனைவி, பாத்திமா சமூக வலைத்தளத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் உன்னை எனக்கு மிக அருகிலேயே வைத்திருந்திருப்பேன்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் கூட உன்னைக் காட்டியிருக்க மாட்டேன், இப்போது உன் எண்ணங்களில் மூழ்கி இறந்து போகிறேன், நீ இல்லாமல் வாழ முடியாது, அம்மா மற்றும் அப்பாவிடம் திருப்பி வந்து விடு. லாரா உனக்காக காத்திருக்கிறாள். லவ் யூ தங்கமே என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவினைப் பார்த்த பலர் கண் கலங்கி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.