சீக்கிரமா வருமா.. சிக்கனை வைத்து கொளுத்திப் போட்ட சண்டை.. 2வது ப்ரமோ
விஜய் டிவியின் பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
விஜய் டிவியின் பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வழக்கமாக இருப்பதை போல இல்லாமல், இந்த சீசனில் ஒரே வாசலில் இரு வீடுகள் என்ற வகையில் நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. இதில் 6 போட்டியாளர்கள், தனித்து ஒரு வீட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. விசித்ரா, வினுஷா, ஜோவிகா, பவா, செல்லதுரை, பிரதீப், கேப்டன் விஜய் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியின்மூலம் ஒருங்கிணைந்துள்ளனர்.
எங்க 2 பேருக்கும் சமமான போட்டியாளர் இருக்காங்களா? சர்ச்சையை கிளப்பிய விசித்ரா
ஒவ்வொரு நாளும் அன்றைய நிகழ்ச்சிக்கான மூன்று ப்ரமோக்கள் வெளியாகவுள்ள நிலையில், இன்றைய தினம் காலையிலேயே முதல் ப்ரமோ மூலம் விசித்ரா, கேப்டன் விஜய், பிரதீப் இடையில் மோதல் வெடித்ததை காண முடிந்தது.
இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோ வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இதில் கேப்டன் விஜய், பிரதீப் இடையே உணவு விஷயத்தில் மோதல் ஏற்படுவதை பார்க்க முடிந்தது.
சப்பாத்திக் குருமாவை திட்டமிடாமல் செய்தது ஏன் என்று பிரதீப் கேள்வி எழுப்ப, நேற்றைய தினம் அனைவரும் இணைந்து தீர்மானித்திருந்தபோது பிரதீப் என்ன செய்துக் கொண்டிருந்தார் என்று கேப்டன் விஜய் கேள்வி எழுப்புவதாக இன்றைய இரண்டாவது ப்ரமோவில் காணப்படுகிறது.
மேலும் அனைவரும் பேசிக் கொண்டிருந்தபோது பிரதீப் டவலாட்டிக் கொண்டிருந்ததாகவும் அதனால் அவரிடம் எதையும் கேட்க முடியாது என்றும் கேப்டன் விஜய் தீர்க்கமாக கூறுகிறார்.
இதனால் கடுப்பாகும் பிரதீப், தனக்கு தேவையான உணவை கரும்பலகையில் எழுதிவிட்டு செல்கிறார். அன்றைய தினம் தனக்கு சிக்கன் ப்ரை வேண்டும் என்றும் கூறுகிறார்.
தொடர்ந்து பேசும் கேப்டன் விஜய், டீ, காபி மற்றும் ஸ்நாக்ஸ் மட்டும்தான் கேட்கும்போதேல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதனால் இன்றைய எபிசோட் மிகவும் காட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளிலிருந்தே இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யங்கள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
#Day2 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV" pic.twitter.com/PnnNVabVEX — Vijay Television (@vijaytelevision) October 3, 2023