விஜயகாந்த் சொன்ன அட்வைஸ்.. காது கொடுத்து கேட்காத கௌசல்யா!
நடிகை கௌசல்யா விஜயகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக சில படங்களில் நடித்தார்.
நடிகை கௌசல்யா விஜயகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக சில படங்களில் நடித்தார்.
முன்னணி நடிகையாக வலம் வர வேண்டிய இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் அமைதியாக கவர்ச்சியாக நடிக்கவே மறுப்பாராம். அது மட்டுமின்றி, படப்பிடிப்பு தளங்களில் அதிகமாக யார் கூடவும் பேசாமல் மிகவும் அமைதியாக இருப்பாராம்.
இதன் காரணமாக ஆரம்ப காலத்தில் பல படங்களில் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் பட வாய்ப்புகளே இல்லாமல் சினிமாவை விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விலகினார் என்றே கூறலாம்.
இந்த நிலையில், இவர் வளர்ந்து வந்துகொண்டிருந்த காலத்தில் விஜயகாந்த் இவருக்கு அட்வைடஸ் ஒன்றையும் கொடுத்துள்ளாராம்.
கௌசல்யா விஜயகாந்திற்கு ஜோடியாக தேவன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜயகாந்த் கௌசல்யாவிடம் பேசிகொண்டு இருந்தாராம்.
அப்போது நீ ஒரு நடிகையாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் எனவே படக்குழு எப்படியெல்லாம் நடிக்க சொல்கிறதோ அதே போல நடி. சில விஷயங்கள் நடக்கும்போது உன்னுடைய குரல் வெளியே கேட்கவேண்டும்.
அப்போது தான் ஒரு முன்னணி நடிகையாக நீ வளர முடியும். நீ இப்படியே பேசாமல் இருந்தால் அது நன்றாக இருக்காது நடிகை என்றால் வேறு மாதிரி இருக்கவேண்டும். படப்பிடிப்பு தளத்தில் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய் நன்றாக பேசி கொண்டு ஜாலியாக இரு என அட்வைஸ் செய்தாராம்.
ஆனால், கௌசல்யா இதெயெல்லாம் காது கொடுத்துக்கூட கேட்கவே இல்லயாம். ஏனென்றால், அவருடைய இயல்பே யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பது தானாம். அந்த சமயம் விஜயகாந்த் சொன்ன கருத்தை கேட்டு இப்போது கௌசல்யா வருத்தமாக இருக்கிறாராம்.
இது குறித்து பேசிய கௌசல்யா ” விஜயகாந்த் எனக்கு கொடுத்த அட்வைஸை கேட்காமல் போய்விட்டேன்” என் தெரிவித்துள்ளார்.