இந்திய அணியிலிருந்து வீட்டுக்கு சென்ற கோலி, ரோகித்.. என்ன நடக்குது சார்?

இரு அணிகளும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வான்கடே மைதானத்தில் தான் விளையாடினார்கள். தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு அணிகளும் அதே மைதானத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியிலிருந்து வீட்டுக்கு சென்ற கோலி, ரோகித்.. என்ன நடக்குது சார்?

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களது அடுத்த போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. இலங்கை அணியை பொறுத்த வரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்த நிலையில் பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்தி இழந்த பெருமையை மீட்க வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குகிறது.

இரு அணிகளும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வான்கடே மைதானத்தில் தான் விளையாடினார்கள். தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு அணிகளும் அதே மைதானத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் நேற்று மும்பை வந்து இறங்கினர்.ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நட்சத்திர வீரர் விராட் கோலி சூரியகுமார் யாதவ் ஆகியோர் அணியுடன் ஹோட்டலுக்கு செல்லாமல் அவரவர்கள் தங்களுடைய வீட்டிற்கு சென்று விட்டார்கள். தற்போது இந்த மூன்று வீரர்களும் மும்பையில் தான் தங்கி இருக்கிறார்கள்.

இதனால் தங்களுடைய சொந்த வீட்டிற்கு சென்று ஒரு நாள் தங்கி கொண்டு பின்னர் பயிற்சி செய்ய மட்டும் வந்து கொள்ளலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். கோலி, ரோஹித் ஆகியோர் அணியின் மூத்த வீரர்கள் என்பதால் அவர்களுடைய இந்த முடிவுக்கு அணி நிர்வாகம் எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் இது தவறான முன் உதாரணம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

வீடு இருக்கிறது என்பதற்காக அணி வீரர்கள் ஹோட்டலை விட்டு சென்று விட்டால், அது அணியின் பிளவை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 

மேலும் ஹோட்டலில் ஒன்றாக இருக்கும் போது தான் அடுத்த போட்டிக்கான யுத்தியை அமைப்பது,ஆலோசனை மேற்கொள்வது என ஒரே சக்தியாக இயங்க முடியும் என்றும் வீரர்கள் அவரவர்கள் வீட்டிற்கு சென்று விட்டால் இது அனைத்தும் பாதிக்கப்படும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு வீரரும் தங்களுடைய வீட்டிற்கு சென்று விட்டால் அணியின் நிலை என்ன ஆகும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் மறுபுறம் உலகக்கோப்பை போன்ற நெடுந்தொடரில் விளையாடும் போது வீரர்கள் தங்களுடைய குடும்பத்தினரை மிஸ் செய்ய வாய்ப்பு இருக்கிறது. 

இதனால் வாய்ப்பு கிடைக்கும் போது தங்களுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது தவறு இல்லை என்ற கருத்து ஒரு தரப்பினர் முன்வைக்கின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...