விமான நிலையத்தில் பெண்ணுடன் சண்டைக்கு சென்ற விராட் கோலி! வைரலாகும் வீடியோ!
தனது குடும்பத்தை நோக்கி அந்த நிருபர் கேமராவை வைத்திருந்ததால் விராட் கோலி கோபம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.
மெல்போனில் இந்த போட்டி நடைபெற உள்ளதால் இந்திய வீரர்கள் மெல்போனை வந்தடைந்தனர். அந்த சமயத்தில் விராட் கோலி விமான நிலையத்தில் ஒரு பெண் நிரூபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது குடும்பத்தை நோக்கி அந்த நிருபர் கேமராவை வைத்திருந்ததால் விராட் கோலி கோபம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியே வரக்கூடாது என்று விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் தீவிரமாக பார்த்து வருகின்றனர். எனவே விமான நிலையில் தனது குழந்தைகளை நோக்கி கேமரா இருந்ததால் என்பதால் விராட் கோபமடைந்துள்ளார்.
"விமான நிலையத்தில் விராட் கோலி தன் குடும்பத்தை நோக்கி கேமரா இருந்ததும், தனது குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியே வந்து விடுமோ என்று கோபம் அடைந்தார், பின்பு அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது" என்று நிருபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எனது குழந்தைகளுக்கும், எங்களுக்கும் கொஞ்சம் தனியுரிமை தேவை. எனவே எனது அனுமதி இல்லாமல் அவர்களை புகைப்படம் எடுக்க முடியாது" என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
பின்னர் உங்கள் குடும்பத்தை புகைப்படம் அல்லது வீடியோக்களை எடுக்க வில்லை என்று நிருபரும், கேமரா மேனும் கூறவே பின்னர் அங்கிருந்து புறப்பட்டு உள்ளார் விராட் கோலி.