விராட் கோலியின் வரலாற்று சரிவு... ரசிகர்களால் வந்த வினை.. பிசிசிஐ எடுத்த மோசமான முடிவு?

அவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக ஆடி வருவது தான் விராட் கோலியின் இந்த மோசமான நிலைக்கு காரணம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

விராட் கோலியின் வரலாற்று சரிவு... ரசிகர்களால் வந்த வினை.. பிசிசிஐ எடுத்த மோசமான முடிவு?

இந்தியா - ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் கடைசி போட்டியில் ஆடிய விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகிய நிலையில், அதுவே சர்வதேச டி20 போட்டியில் விராட் கோலியின் முதல் டக் அவுட் ஆக அமைந்தது.

அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த கோலி, மீண்டும் சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்றதுடன், 2024 டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முதல் மூன்று போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார். 

கடைசியாக நடந்த அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியதுடன,  தொடர்ந்து நான்கு சர்வதேச போட்டிகளில் அவர் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி இருக்கிறார்.

அவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக ஆடி வருவது தான் விராட் கோலியின் இந்த மோசமான நிலைக்கு காரணம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச போட்டிகளில் பெரும்பாலும் மூன்றாம் வரிசை வீரராகவே விளையாடும் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் மட்டுமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துவக்க வீரராக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் அவர் அதிக ரன் குவித்து வருவதை சுட்டிக்காட்டிய ஆர்சிபி ரசிகர்கள், இந்திய அணியும் விராட் கோலியை துவக்க வீரராக ஆட வைத்தால் அதிக ரன்கள் குவிப்பார் என கூறி வந்தனர்.

இதே கருத்துக்களை முன்னாள் வீரர்களும் கூறத் துவங்கியதால், ஒரு கட்டத்தில் பிசிசிஐ-யும் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.

விராட் கோலியை மீண்டும் மூன்றாம் வரிசையில் ஆட வைத்து அவரால் ரன் குவிக்க முடியாமல் போனாலோ அல்லது இந்திய அணி தோல்வி அடைந்தாலோ அப்போது கடுமையான விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கும். 

அதன் காரணமாகவே பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் நிர்பந்தத்திற்கு ஆளாகி விராட் கோலியை துவக்க வீரராக ஆட வைத்து உள்ளது.

இந்த தீர்மானமோ கோலியின் இந்த மோசமான ஃபார்முக்கு காரணம் என கூறப்படுவதுடன், சூப்பர் 8 சுற்றிலாவது விராட் கோலி மீண்டு வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp