கோலி இந்திய அணிக்கு திரும்பினார்... 8ஆம் தேதி சம்பவம் உறுதி!

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் கடந்த முறை ரன்னர் அப் ஆன நியூசிலாந்தும் பல பரிட்சை நடத்துகின்றன.

கோலி இந்திய அணிக்கு திரும்பினார்... 8ஆம் தேதி சம்பவம் உறுதி!

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் கடந்த முறை ரன்னர் அப் ஆன நியூசிலாந்தும் பல பரிட்சை நடத்துகின்றன.

இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரை நடத்தும் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுடன் வரும் எட்டாம் தேதி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய ஆஸ்திரேலிய அணிகள் சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.

இந்திய அணி வீரர்கள் கடந்த ஒரு வாரமாக நாட்டின் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லைக்கு சென்று ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கடும் கடுப்பில் உள்ளனர். 

இந்த நிலையில் இந்திய அணிக்கு தங்களது முதல் போட்டியில் விளையாட மூன்று நாட்கள் ஓய்வு இருக்கிறது. எனினும் சென்னையில் புதன்கிழமை மாலை வந்தடைந்த இந்திய வீரர்கள் நேரடியாக ஹோட்டலுக்கு சென்று ஓய்வு எடுத்துக் கொண்டனர்.

இதன்பிறகு இந்திய அணி வீரர்கள் நாளை மாலை நேரத்தில் பயிற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகிய விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. 

இந்த நிலையில் சென்னைக்கு இந்திய அணி வந்தபோது விராட் கோலியும் மும்பையில் இருந்து வந்து அணி வீரர்களுடன் இணைந்து கொண்டார்.

விராட் கோலியை ரசிகர்கள் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சிஎஸ்கே வீரர் ஜடேஜாவுக்கு தமிழக ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தனர். 

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதே போன்று ஆஸ்திரேலிய அணி வீரர்களும் தற்போது சென்னை வந்து அடைந்திருக்கிறார்கள்.

இரு அணிகளும் நடப்பாண்டு தொடக்கத்தில் சென்னையில் பல பரிட்சை நடத்தியது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனால் அதற்கு பதிலடி கொடுப்பது மட்டுமல்லாமல் வெற்றியுடன் தொடரை தொடங்கும் உத்வேகத்தில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.

எப்படி திருப்பாச்சி படத்தில் தங்கைக்காக சென்னையில் விஜய் காலடி எடுத்து வைத்து சம்பவம் செய்வாரோ அதேபோல் தற்போது இந்திய அணியும் ரகசிர்களின் கனவுக்கு சென்னையில் என்ட்ரி கொடுத்திருக்கிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp