கோலிக்கு ஆப்பு... 3ஆவது வரிசையில் இறக்கப்பட்ட வீரர்.. பிசிசிஐ மாஸ்டர் பிளான்?
டி20 அணியில் இருந்து விராட் கோலியை நீக்க மும்பை வீரர் ஒருவரை தயார் செய்து வருவதாக கோலி ரசிகர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
விராட் கோலியின் பேட்டிங் இறங்கும் நம்பர் 3 இடத்தில் வேறு ஒரு வீரரை இறக்க முதல்கட்ட வேலை நடந்து வருவதாக கோலி ரசிகர்கள் புகார் கூறி வருகின்றனர்.
டி20 அணியில் இருந்து விராட் கோலியை நீக்க மும்பை வீரர் ஒருவரை தயார் செய்து வருவதாக கோலி ரசிகர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் பிசிசிஐ, இந்திய டி20 அணியை தயார் செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது.
அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு இடம் உண்டா என தெரியவில்லை. கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இதுவரை நடந்த டி20 தொடர்கள் எதிலும் அவர்கள் இருவரும் பங்கேற்கவில்லை.
இந்திய அணிக்கு ஐசிசி வைத்த ஆப்பு... தென்னாப்பிரிக்கா தொடருக்கு அம்பயரே இவருதான்!
இந்த நிலையில், ரோஹித் சர்மா தான் டி20 உலகக்கோப்பை அணியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் கோலியை அணியில் சேர்க்க முடியாது எனவும், அதைப் பற்றி அவரிடம் பேசப் போவதாகவும் செய்தி வெளியாகியது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்காக முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்து இருந்த இஷான் கிஷனை அணியில் இருந்தே நீக்கினார்கள்.
டி20 அணியில் மூன்றாம் வரிசையில் ஆடுபவர்கள் நங்கூரம் போட்டு நின்று ஆட வேண்டும். அந்த பணியை விராட் கோலி சிறப்பாக செய்து வந்த நிலையில், தற்போது ஸ்ரேயாஸ் ஐயரை டி20 அணியில் இறக்கியது பிசிசிஐ.
ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலிய டி20 தொடரில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த நிலையில் அவரை டி20 அணியில் நிரந்தர மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக ஆட வைக்க அடுத்த கட்ட காய்நகர்த்தல் நடந்து வருவதாக கோலி ரசிகர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.