இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்.. விராட் கோலி செய்த அதிரடி மாற்றம்.. மாஸ்டர் பிளான் இதுதான்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடக்கவுள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்.. விராட் கோலி செய்த அதிரடி மாற்றம்.. மாஸ்டர் பிளான் இதுதான்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடக்கவுள்ளது. 

போட்டியிலேயே வெல்ல வேண்டும் என்று இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், ஏற்கனவே இந்திய ஏ அணியுடன் இந்திய அணி 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.

அந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கலந்து கொள்ளவில்லை. நேற்று முன்தினம் இந்திய அணியுடன் மீண்டும் இணைந்துகொண்ட விராட் கோலி, உடனடியாக பயிற்சியை தொடங்கினார். 

சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வெளிநாட்டு வீரர் விராட் கோலி தான். இதனால் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் விராட் கோலியை நம்பியே இந்திய அணி களமிறங்குகிறது. 

சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 3 வீரர்களும் தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளனர். புஜாரா மற்றும் அஜிங்கியா ரஹானே இருவரும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

இதனால் சீனியர் வீரர்கள் இல்லாமல் விராட் கோலிக்கு, ஜூனியர் வீரர்களுக்கு வழிகாட்டி அவர்களையும் தன்னுடன் அழைத்து செல்ல வேண்டிய பொறுப்பும் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் ரபாடா மற்றும் இங்கிடியின் வேகத்தை எதிர்கொண்டு விளையாட, பயிற்சியில் போது 18 யார்ட்-கள் கொண்ட பிட்சில் பேட்டிங் செய்து பயிற்சி பெற்றுள்ளார். இதன் மூலம் பவுலர்களின் வேகம் மற்றும் பவுன்ஸை எளிதாக எதிர்கொள்ள முடியும்.

இந்திய அணியின் விராட் கோலி இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு என்று பிரத்யேகமாக ஸ்டாண்ட்ஸை மாற்றி ஆடி வரும் பழக்கம் கொண்டவர். 

அந்தந்த சூழல்கள் மற்றும ஆடுகளங்களுக்கு ஏற்ப ஸ்டாண்ட்ஸை மாற்றி பவுலர்களையும் குழப்பி, லைன் மற்றும் லெந்தை மாற்ற வைக்க கூடிய பேட்ஸ்மேன் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp