வாழ்க்கையின் மிகப்பெரிய ஏமாற்றம்... இதுதான் மோசமான தொடர்.. விராட் கோலி வேதனை!
அடுத்த நான்காண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடுவது பற்றி இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. எனவே, வாழ்க்கையில் என்ன நடந்ததோ அதை ஏற்று அமைதி அடைய வேண்டும்.

அண்மையில் விளையாடிய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய ஏமாற்றம் என சமீபத்தில் விராட் கோலி அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அது மிகவும் சமீபத்தில் நடந்தது என்பதால் தனது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், நீண்டகாலமாகவே 2014ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என்னை காயப்படுத்திக் கொண்டே இருந்ததாகவும் கூறி உள்ளார்.
அடுத்த நான்காண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடுவது பற்றி இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. எனவே, வாழ்க்கையில் என்ன நடந்ததோ அதை ஏற்று அமைதி அடைய வேண்டும்.
2014 ஆம் ஆண்டில் நடந்த மோசமான இங்கிலாந்து ஆட்டத்திற்கு என்னால் 2018 ஆம் ஆண்டு பதிலடி கொடுக்க முடிந்தது. ஆனால், இப்போது அது போல என்னால் செய்ய முடியாது.
நீங்கள் நீண்ட காலமாக நன்றாக விளையாடிக் கொண்டிருந்தால்உங்கள் செயல்பாடுகளுக்கு பழகி விடும் மக்கள், சில சமயம் உங்களை விட அவர்கள் மிகவும் கவலைப்படுவார்கள்.
வெளியில் இருந்து ஏமாற்றத்தை உங்களுக்குள் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் உங்களை நீங்களே அதிக சுமைக்கு ஆளாக்கிக் கொள்வீர்கள். அப்படி செய்தீர்கள் என்றால் பதற்றத்துக்கு ஆளாவோம்.
அதை நான் ஆஸ்திரேலியாவிலும் அனுபவித்ததுடன், முதல் டெஸ்ட் போட்டியில் நன்றாக ஆடிய போது, நிச்சயமாக இது மற்றொரு மிகப் பெரிய தொடராக இருக்கும் என்று நல்ல விதமாக நினைத்தேன். ஆனால், அது அப்படி நடக்கவில்லை என்றார் விராட் கோலி.