IPL 2025: சொந்த மண்ணில் அதிரடி... அரைசதம் விளாசி ரசிகர்களை மிரளவைத்த விராட் கோலி!

நடப்பு ஐபில் சீசனில் ஆர் சி பி அணி தங்களுடைய சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளதுடன், விராட் கோலி மீண்டும் ஒரு அரை சதம் அடித்து 160க்கு மேல் ஸ்டிரைக் ரைட்டை வைத்து ரசிகர்களை மிரள செய்துள்ளார்.

Apr 25, 2025 - 07:54

இந்த நிலையில்,  வெற்றி குறித்து பேசிய விராட் கோலி, சொந்த மண்ணில் மூன்று போட்டிகளில் விளையாடி தோல்வியை தழுவியதால், இது குறித்து விவாதித்து பேட்டிங் வரிசையில் என்ன செய்தால் வெற்றி கிடைக்கும் என்பது குறித்து பேசியதாக கூறினார்.

நாங்கள் அபாரமாக செயல்பட்டு அடித்த ஸ்கோரை பார்த்தவுடன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். பனிப்பொழிவு இருந்ததால் இரண்டாவது இன்னிங்ஸின்போது பந்து பேட்டிற்கு நன்றாக வந்தது. 

இதன் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர்கள் பிரமாதமாக ஆடி எங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார்கள். ஆனால் நாங்கள் மீண்டும் போராடி தான் ஆட்டத்திற்குள் வந்து வெற்றியைப் பெற்று தற்போது இரண்டு புள்ளிகளை அடைந்து இருக்கின்றோம். 

எங்களுக்கு முதல் சவாலே டாசை வெல்வது தான். நாங்கள் பந்து வீசும் போது பனிப்பொழிவு அதிகம் இருந்தது. பேட்டிங் செய்யும்போது நல்ல இலக்கிற்கு மேல் அடிக்க வேண்டும் என்று போராடினோம்.

ஒரு வீரர் தொடர்ந்து இருபது ஓவர் வரை பேட்டிங் செய்ய வேண்டும். மற்றவீரர்கள் அவரை சுற்றி அதிரடியாக விளையாட வேண்டும். மைதானம் பற்றி தேவ்தத் படிக்கலுக்கும் எனக்கும் நன்றாகவே தெரியும். 

பந்து நன்றாக பவுன்ஸ் ஆனதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டு ரன்ளை சேர்த்தோம்” என விராட் கோலி தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!