இதனை செய்யாவிட்டால் இந்திய அணியிலேயே விராட் கோலியை சேர்க்க கூடாது.. ஆஸி வீரர் அதிரடி

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி மட்டும் சேர்க்கக்கூடாது என்று முன்னாள் ஆஸி கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

இதனை செய்யாவிட்டால் இந்திய அணியிலேயே விராட் கோலியை சேர்க்க கூடாது.. ஆஸி வீரர் அதிரடி

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி மட்டும் சேர்க்கக்கூடாது என்று முன்னாள் ஆஸி கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை பெற்ற விராட் கோலி, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எந்த இடத்தில் விளையாட போகிறார் என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடக்க இடத்தில்தான் விராட் கோலியை களம் இறக்க வேண்டும் என்று பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தெரிவித்து உள்ளதுடன்,  இதன் மூலம் விராட் கோலி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை நிலை நிறுத்த முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 

எனினும், இது குறித்து பேசிய ஹைடன், விராட் கோலி தொடக்க வீரராக விளையாடவில்லை என்றால் அவரை அணியிலே சேர்க்கக்கூடாது என்று விமர்சித்து இருக்கின்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “டி20 அணியில் எப்போதுமே வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் வகையில் பேட்டிங் வரிசையை அமைக்க வேண்டும். 

வலது கை பேட்ஸ்மேன்கள் டாப் 5 பேட்டிங் வரிசையில்  இருப்பது போல் நீங்கள் அணியை தேர்வு செய்தால் அது எதிரணிக்கு சாதகமாக அமையும்.  விராட் கோலி தொடக்க வீரராக நல்ல பார்மில் இருப்பதால் அவர் ஜெயஸ்வாலுடன் களம் இறங்க வேண்டும். 

ரோகித் சர்மா எந்த இடத்தில் இறங்கி விளையாடினாலும், அவர் அதிரடியை காட்டுவார் என்பதால்,  ரோகித் சர்மாவை நடு வரிசையில் களம் இறக்க வேண்டும். நான்காவது வீரராக ரோகித் சர்மா களமிறங்கிய போது தான் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்திருக்கிறார்.” என்றார்.

எனினும் ஹைடனின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்த ரெய்னா, விராட் கோலி எப்போதுமே மூன்றாவது வீரராக தான் களமிறங்கி விளையாடி அதிக ரன்கள் குவித்திருக்கிறார். 

ஜெய்ஸ்வால் நல்ல பார்மில் உள்ளதால், அவர்தான் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும். அமெரிக்க ஆடுகளங்கள் போட்டி நடக்க நடக்க தோய்வாகும் என்பதால், கோலிக்கு மூன்றாம் இடம் தான் சரி வரும் என்று ரெய்னா கூறி உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp