அதிக ரன் குவித்தும் அணியில் இடமில்லை? கோலியை ஒதுக்கும் பிசிசிஐ!

விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் நிதான ஆட்டம் ஆடுவதைப் போல டி20 போட்டிகளிலும் அவர் நிதான ஆட்டம் ஆடுவதாக பலரும் கூறி வருகின்றனர்.

அதிக ரன் குவித்தும் அணியில் இடமில்லை? கோலியை ஒதுக்கும் பிசிசிஐ!

சர்வதேச டி20 போட்டி மற்றும் ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த விராட் கோலி பேட்டிங் குறித்து அண்மை காலமாக விமர்சன்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

டி20 போட்டிகளில் இந்திய அணி ஆடத் துவங்கிய போது 20 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்தாலே சிறந்தது என்று இருந்தது.ஆனால், இப்போது 200 ரன்கள் அடிப்பது எல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. 

ஆனால், விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் நிதான ஆட்டம் ஆடுவதைப் போல டி20 போட்டிகளிலும் அவர் நிதான ஆட்டம் ஆடுவதாக பலரும் கூறி வருகின்றனர்.

இதை அடுத்தே அவருக்கு 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டு வருகின்றது. எனவே விராட் கோலி 2024 ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங் பாணியை மாற்றி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட வேண்டும்.

இந்த முறை மூன்றாம் வரிசையில் களமிறங்க உள்ள விராட் கோலி இந்த முறை அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட முயல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு இதுகுறித்து அவரிடம் பேசி இருப்பதாக கூறப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp