முதல் நாளே வேலையை ஆரம்பித்த விசித்ரா.. ஐஷுவின் ஆடை குறித்து சர்ச்சை கருத்து..!

Bigg Boss 7: ஐஷுவின் ஆடைகள் கிளாமராகவும் வல்கராகவும் இருப்பதாகவும், என்னதான் இளம் பெண்ணாக இருந்தாலும் இப்படி எல்லாம் ஆடை அணிவதா? என்றும் சரியான ஆடை அணிவது ரொம்ப முக்கியம் என்றும் பேசி இருந்தார். 

முதல் நாளே வேலையை ஆரம்பித்த விசித்ரா.. ஐஷுவின் ஆடை குறித்து சர்ச்சை கருத்து..!

Bigg Boss 7

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் முதல் நாளே கண்டன்ட் கிடைத்துவிட்டது.

முதல் நாளே பெரிய வீடு, சின்ன வீடு என இரு பிரிவுகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர். அது மட்டும் இன்றி முதல் நாளே நாமினேஷன் படலம் ஆரம்பம் ஆகிவிட்டது. அதில் இரண்டு விதமான நாமினேஷன் முறை அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் அதிக நபர்களால் நாமினேஷன் செய்யப்பட்டவர்களாக அனன்யா, ஐஷு, பவா செல்லத்துரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் அந்தோணி மற்றும் யுகேந்திரன் ஆகியோர் உள்ளனர். 

இந்த ஏழு பேரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு போட்டியாளரும் நாமினேஷன் செய்யும் போது தகுந்த காரணத்தை கூற வேண்டும் என்று பிக்பாஸ் கூறியிருந்த நிலையில் விசித்திரா நாமினேஷன் செய்யும்போது ஐஷுவின் ஆடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

ஐஷுவின் ஆடைகள் கிளாமராகவும் வல்கராகவும் இருப்பதாகவும், என்னதான் இளம் பெண்ணாக இருந்தாலும் இப்படி எல்லாம் ஆடை அணிவதா? என்றும் சரியான ஆடை அணிவது ரொம்ப முக்கியம் என்றும் பேசி இருந்தார். 

இவரது பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பலர் ஆதரவும் ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp