தொழில்நுட்பம்வணிகம்

vivo தனது வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்பு உத்தரவாதத்தை நீடித்துள்ளது

தற்போதைய COVID-19 தொற்று பரவலைத் தொடர்ந்து, உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான vivo, இலங்கையில் உள்ள தனது அனைத்து சேவை நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடியுள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டே, இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இதனை ஈடுசெய்யும் முகமாக vivo, இலங்கையில் அதன் ஸ்மார்ட்போன்களுக்கான உத்தரவாதத்தை நீடித்துள்ளது. இதன் பிரகாரம், 2020மார்ச் 16 முதல் மே 30 வரையான காலப்பகுதிக்குள் உத்தரவாதம் காலாவதியாகும்vivoசாதனங்களைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கான உத்தரவாதம் 2020 மே 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொள்வனவு செய்யப்பட்ட vivo சாதானங்களுக்கு மட்டும் இந்த நீடிப்பு தானாக செல்லுபடியாகும். வாடிக்கையாளர்கள் தமது IMEI இலக்கத்தைக் கொண்டு,vivoவின் இணையத்தளத்தில் தமது உத்தரவாதம் தொடர்பான தகவல்களை சரிபார்க்க முடியும்.

மிகுந்த சமூக பொறுப்புணர்வுடன் கூடிய நிறுவனம் என்ற வகையில், இந்த உத்தரவாதக் கால நீடிப்பானது நுகர்வோருக்கு வசதியாக அமையுமென்பதுடன், vivoவின் அக்கறையையும் எடுத்துக்காட்டுகின்றது.

“இந்த முக்கியமான நேரத்தில், எங்கள் பொறுப்புணர்வு தொடர்பில் உறுதியாக உள்ளதுடன், COVID-19 தொற்றுபரவிவரும் நிலையில் எமது வாடிக்கையாளர்களின் வசதி கருதியே இந்த உத்தரவாதம் நீடிக்கப்பட்டுள்ளது,”எனKevin Jiang, CEO, vivo mobile Sri Lankaதெரிவித்தார்.

இந்தநீடிப்பானது மறு அறிவித்தல் வரை மாற்றமின்றி இருக்குமென்பதுடன், vivo வாடிக்கையாளர்கள் சேவை தொடர்பான அனைத்து விபரங்களையும்,0115 677 677 என்ற துரித அழைப்பு இலக்கம் ஊடாகவோ அல்லது servicecenter@lk.vivo.comஎன்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவோ அல்லது www.facebook.com/vivoSriLankaஎன்ற பேஸ்புக் பக்கத்திற்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியோ பெற்றுக்கொள்ள முடியும்.

vivoஏற்கனவே COVID-19பரவுவதைத் தவிர்க்க பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளதுள்ளது. இலங்கையில் உள்ள பணியாளர்கள்vivo பாவனையாளர்களுக்கு உதவும் பொருட்டு வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்தகடினமான நேரங்களில், எங்கள் வாடிக்கையாளர்கள், பங்காளர்கள், பணியாளர்கள் மற்றும் சக பிரஜைகளின் நல்வாழ்வே எங்கள் பிரதான நோக்கமாகும்.

vivo பற்றி

vivo உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் என்பதுடன் புதுமையான ஸ்மார்ட் மொபைல்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில் திடமாகவுள்ளது. vivo உலகளவில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சான்றளிக்கப்பட்டுள்ளது. vivo உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட சந்தைகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், உலகளவில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்களில்அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கிடைக்கப் பெறுகின்றது.

வன்பொருள் வடிவம் மற்றும் உற்பத்தி முதல், மென்பொருள் உருவாக்கம் (Android based Funtouch OS) வரை, vivo பூரண மற்றும் நிலைபேறான தொழில்நுட்ப சூழலை கட்டமைத்துள்ளது. தற்போது 20,000 இயக்குனர்கள் Dongguan, Shenzhen, Nanjing, Chongqing ஆகிய நான்கு தலமையகங்களின் கீழ் பணியாற்றுகின்றனர்.

3,000 பொறியியலாளர்கள் San Diego, Shenzhen, Nanjing, Beijing, Hangzhou, Taipei மற்றும் Silicon Valleyஆகிய 7 அபிவிருத்தி நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் Dongguan, Chongqing, Jakarta, New Delhi மற்றும் Bangladesh ஆகிய ஐந்து உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது.

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close