டெஸ்ட் மேட்ச்சாக மாறிய இருபதுக்கு இருபது போட்டி... சோலியை முடித்த 2 இந்திய வீரர்கள்

போட்டி நடந்த ராஜ்கோட் மைதானத்தில் எளிதாக ரன் குவிக்கலாம் என்பதால் இந்திய அணி இந்த இலக்கை எட்டும் என்ற நம்பிக்கை இருந்தது. 

டெஸ்ட் மேட்ச்சாக மாறிய இருபதுக்கு இருபது போட்டி... சோலியை முடித்த 2 இந்திய வீரர்கள்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர், ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் போட்டி போல ஆடி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்ததுடன், இந்திய அணிக்கு 172 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

போட்டி நடந்த ராஜ்கோட் மைதானத்தில் எளிதாக ரன் குவிக்கலாம் என்பதால் இந்திய அணி இந்த இலக்கை எட்டும் என்ற நம்பிக்கை இருந்தது. 

எனினும், பவர் பிளே ஓவர்களுக்குள் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் விக்கெட்டை இழந்ததுடன்,  திலக் வர்மாவும் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அதிரடியாக ரன் சேர்ப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதன் பின்னரும் இருவரும் ஒன்று, இரண்டு என சிங்கிள் ரன்களாக ஓடியதோடு டெஸ்ட் போட்டி போல பல பந்துகளை வீணடித்தனர். 

வாஷிங்டன் சுந்தர் 13 வது ஓவரின் முதல் பந்தில் 6 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்ததுடன், அப்போது அவர் 15 பந்துகளை சந்தித்து இருந்தார்.

வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் போட்டி போல ஆடியதால் 47 பந்துகளில் 87 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அடுத்து வந்த அக்சர் பட்டேலும் அதே போல நிதானமான ஆடினார். 

அப்போது ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். ஹர்திக் பாண்டியா 18 வது ஓவர் வரை 100 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை தொடாமல் நிதானமாக ரன் சேர்த்து வந்தார். 

கடைசி இரண்டு ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்ற நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்ததுடன், இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 8 பேட்ஸ்மேன்கள் இருந்த நிலையில் எதற்காக ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் நிறைய பந்துகளை வீணடித்தார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

அதேபோல, 18ஈவது ஓவர் வரை களத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா எதற்காக பவுண்டரி அடிக்காமல் காத்திருந்தார் என்பதும் புரியாத நிலையில், இந்த போட்டியை டெஸ்ட் போட்டி ஆட்டம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp