ஜடேஜா இடத்தில் தமிழக வீரருக்கு வாய்ப்பு... டி20 தொடரில் வரவுள்ள ட்விஸ்ட்!

அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்குள் இந்திய அணி ஜடேஜாவுக்கான மாற்று வீரரை கண்டறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜடேஜா இடத்தில் தமிழக வீரருக்கு வாய்ப்பு... டி20 தொடரில் வரவுள்ள ட்விஸ்ட்!

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அடுத்த சில நிமிடங்களிலேயே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தனர். 

தொடர்ந்து சீனியர் வீரரான ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் வென்றபின் உடனடியாக ஓய்வை அறிவித்து, இளைஞர்களுக்கு வழிவிட்டுள்ளனர். 

இதனால், அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்குள் இந்திய அணி ஜடேஜாவுக்கான மாற்று வீரரை கண்டறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆல்ரவுண்டர்களின் இடத்தை நிரப்புவது எளிதானது அல்ல. ஏனென்றால் இந்திய அணியில் கபில் தேவ் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப 30 ஆண்டுகளுக்கும் அதிகம் சென்றது.

இதனால், ஜடேஜா அளவிற்கு பவுலிங் மற்றும் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரை இந்திய அணி நிர்வாகம் தேடி கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அதற்கான முதற்கட்ட முயற்சிகளில் பிசிசிஐ ஏற்கெனவே களமிறங்கிவிட்டது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே, இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும், பெரும்பாலான போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க முடியாமல் இருக்கின்ற நிலையில்,  ஜடேஜா ஓய்வை அறிவித்திருப்பது வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் ஜிம்பாப்வே டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு திறமையை நிரூபிக்கும் பட்சத்தில் ஜடேஜா இடத்தில் வாஷிங்டன் சுந்தரை வைத்து நிரப்ப இந்திய அணி நிர்வாகம் கூடுதல் நம்பிக்கையுடன் முடிவெடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது..

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp