இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்த தமிழக வீரர்... கிடைத்த வாய்ப்பு!
வாஷிங்டன் சுந்தர்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் 5 இன்னிங்ஸில் பந்து வீசி வாஷிங்டன் சுந்தர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
வாஷிங்டன் சுந்தர்
இந்திய அணியின் விராட் கோலி ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று நட்சத்திர வீரர்களும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் ஜடேஜாவின் இடத்திற்கு அக்சர் பட்டேல் தான் வரப்போகிறார் என்று ஏற்கனவே தெளிவாகிவிட்டது.
ஆனால் அக்சர் பட்டேல் ஏதேனும் காயம் அடைந்து விட்டால் அல்லது இந்திய அளவில் கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் வேண்டுமென்றால் எந்த வீரர் தெரிவு செய்யப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அந்த இடத்தை தற்போது உறுதி செய்து உள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் 5 இன்னிங்ஸில் பந்து வீசி வாஷிங்டன் சுந்தர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
அனுமதிக்க மாட்டோம்... பிசிசிஐ எடுத்துள்ள முடிவால் பொங்கி எழுந்த பாகிஸ்தான்!
அவருடைய சராசரி 11.62 ஆகும். பேட்டிங்கில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத போதும், தொடர் நாயகன் விருதை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றி இருக்கிறார். இதனால் இந்திய டி20 அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு நிரந்தர இடம் கிடைத்து இருக்கிறது.
இந்த நிலையில், இந்த தொடரை வெற்றியுடன் முடித்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்வதாகவும், முதல் போட்டியில் தோல்வியை தழுவினாலும் தொடர்ந்து வெற்றி பெற்றதாக இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.
ஜிம்பாப்வேவில் உள்ள ஆடுகளங்கள் அனைத்தும் தென்னாப்பிரிக்காவை போலவே செயல்படுவதால், இந்த ஆடுகளங்கள் எப்படி செயல்படும் என்பது குறித்து தெரிந்து கொள்ள நேரமும் கிடைத்தது.
இந்த தொடரில் நான் அதிக முறை பந்து வீசினேன். ஒரு அணியாக நாங்கள் வெற்றி பெற்றோம் என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இம்மாத இறுதியில் இலங்கைக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவார் என கூறப்படுகின்றது.