வாட்ச் மேன் விமர்சனம்

54
வாட்ச் மேன்
W3Schools

டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ. எல் விஜய் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ், யோகி பாபு, சம்யுக்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வாட்ச் மேன்.

சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் ஜி.வி பிரகாஷ். பண பிரச்சனையில் சிக்கி பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்.அதே சமயம் தன்னுடைய காதலியான சம்யுக்தாவையும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறார்.

இதனால் மனமுடைந்து போன ஜி. வி பிரகாஷ் ஒரு பங்களாவுக்குள் திருட செல்கிறார். யாருமே இல்லாத பங்களாவில் உள்ள நாயிடம் சிக்கி கொள்கிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது? நாயிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்? அந்த பங்களாவுக்குள் அப்படி என்ன தான் நடந்தது? தன்னுடைய காதலியை கரம் பிடித்தாரா? என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

ஜி. வி பிரகாஷ் இந்த படத்தின் மூலமாக தன்னால் எப்படியான கதைகளிலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

ஹீரோயிசம் பேசும் படங்களில் பொதுவாக நாயகிக்கு முக்கியத்துவம் இருக்காது. இது தான் தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடந்து வருவது. இந்த படத்திலும் அதே தான் நடந்துள்ளது. சம்யுக்தாவிற்கு பெரிய அளவில் முக்கியதத்துவம் இல்லை. ஏன் டூயட் பாடல் கூட இல்லை.

யோகி பாபுவின் எதார்த்தமான நடிப்பு, நேரத்திற்கு ஏற்றார் போல அவர் கொடுக்கும் கமெண்ட்கள் பிரமாதம். ரசிகர்களை சிரிக்க வைப்பது உறுதி.

இந்த படத்திற்கும் ஜி.வி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். திரில்லர் படத்திற்கு ஏற்றார் போல பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்துள்ளார்.

நீரவ் ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருடைய பணியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த படத்திலும் அப்படி தான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்தோணி இப்படத்திற்கு எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். சிறப்பான முறையில் தன்னுடைய பணியை முடித்து கொடுத்துள்ளார்.

ஏ.எல் விஜய் இப்படத்தை முற்றிலும் மாறுப்பட்ட திரைக்கதையுடன் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் இந்த படத்தை கொண்டு சென்றுள்ளார். இந்த படத்திற்கு பிறகு ஜி.வி பிரகாஷிற்கு குழந்தைகள் ரசிகர்களும் அதிகமாகி விடுவார்கள்.

மொத்தத்தில் வாட்ச் மேன் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாய் சேர்ந்து ரசிக்க வேண்டிய படம்.

ஸ்டார் 3/5

W3Schools