ஏமாற்றமாக இருக்கு.. இப்படி வெளியே போவோம்னு நினைச்சி கூட பார்க்கல.. வேதனையில் பட்லர்!

தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாஸ் பாட்லர், நடப்பு உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏமாற்றமாக இருக்கு.. இப்படி வெளியே போவோம்னு நினைச்சி கூட பார்க்கல.. வேதனையில் பட்லர்!

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்து வெளியேறியது வலியை கொடுப்பதாக அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது. இது இங்கிலாந்து அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாஸ் பாட்லர், நடப்பு உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் நாங்கள் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் இதை தான் தொடர்ந்து பேசி வருகிறோம். இன்றைய ஆட்டத்தில் கூட எங்களுடைய செயல்பாட்டில் சில முன்னேற்றம் இருந்தது.

அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா செல்லுமா? போட்டி ரத்து ஆகுமா?  சர்ச்சையை கிளப்பிய ஆப்கானிஸ்தான் வீரர்

ஆனால் வெற்றி பெற அது போகவில்லை. நாங்கள் இந்தியாவுக்கு உலகக்கோப்பை தொடரில் விளையாட வரும் போது அதிக நம்பிக்கையுடன் வந்திருந்தோம்.

ஆனால் எங்களுக்கு கிடைத்திருக்கும் முடிவை பார்த்து மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. நிச்சயமாக வலிக்கிறது எங்களுடைய திறமைக்கு நாங்கள் நியாயம் சேர்க்கவில்லை. 

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையும் வென்று விட்டு இப்படி ஒரு தோல்வியை தருவது மனது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்களுடைய ரசிகர்களை நாங்கள் ஏமாற்றி விட்டது போல் நினைக்கிறோம்.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும்போது ஜாம்பா மற்றும் மிட்சல் ஸ்ட்ராக் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தது எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

அவர்களை விரைவில் வீழ்த்தி இருந்தோம் என்றால் நாங்கள் துரத்த வேண்டிய இலக்கு 30 ரன்கள் குறைந்திருக்கும். இந்த உலகக்கோப்பை தொடரில் என்னுடைய தனிப்பட்ட பேட்டிங் மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

நான் நல்ல மனநிலையில் இந்த தொடரில் விளையாட வந்தேன். ஆனால் இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. 

மீண்டும் பார்மை நோக்கி செல்ல வேண்டும் என்றால் தொடர்ந்து விளையாட வேண்டும். அதை தான் நாங்கள் செய்யப் போகிறோம் என்று ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp