அரையிறுதியில் இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இதை மட்டும் கடந்து விட்டால் போதும்.. கப்பு முக்கியம் பிகிலு!

2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. 

அரையிறுதியில் இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இதை மட்டும் கடந்து விட்டால் போதும்.. கப்பு முக்கியம் பிகிலு!

இந்திய அணி 2023 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருகிறது. இந்த தொடரில் வீழ்த்தவே முடியாத அணியாக இந்திய அணி உருவெடுத்து உள்ளது.

இதுவரை 8 போட்டிகளில் ஆடி உள்ள இந்திய அணி 8 போட்டிகளிலும் வென்றுள்ளது. 11 க்கு 11 போட்டிகளில் வெல்லும் தகுதியுடன் இந்திய அணி உள்ளது. இந்திய அணியை வீழ்த்த போகும் அந்த அணி எது என்பதே இந்த தொடரில் பெரிய கேள்வியாக உள்ளது. 

பேட்டிங்கில் எல்லாம் கவர் ஆகிவிட்டது. பவுலிங்கிலும் எல்லாம் கவர் ஆகிவிட்டது. இப்படி எல்லா பீல்டும் கவர் ஆகி உள்ளதால் கண்டிப்பாக இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. 

அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக பங்களாதேஷ் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.

அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. 

கடைசியாக இலங்கை, அதன்பின் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் இந்தியா வென்றது. இதன் மூலம் 8 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.

இந்திய அணி செமி பைனலுக்கு சென்றுவிட்டது. சம்பிரதாய முறைப்படி இந்திய அணி அடுத்த மேட்சில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள வேண்டும். அதைத்தவிர இந்திய அணிக்கு இந்த லீக் ஆட்டங்களில் பெரிய போட்டி எதுவும் இல்லை.

ஆனால் செமி பைனல் ஆட்டங்களில் இந்திய அணிக்கு முக்கியமான சில சவால்கள் உள்ளன. இந்திய அணிக்கு கடுமையான சில சிக்கல்கள், சவால்கள் உள்ளன.

சவால் 1

இந்திய அணி தொடர்ந்து வெற்றிபெறுவதால் கொஞ்சம் மேம்போக்கான கண்ணோட்டம், மிதப்பு இந்திய அணிக்கு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இது செமி பைனலில் இந்திய அணிக்கே எதிராக திரும்ப வாய்ப்பு உள்ளது.

சவால் 2 

இந்திய அணியில் பொதுவாகவே செமி பைனல் "சோக்" சகஜம்தான். எந்த கடினமான போட்டியையும் இந்தியா வெல்லும். ஆனால் செமி பைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் எளிதான போட்டிகளில் கூட இந்தியா தோல்வி அடையும். இந்த jinx தடுக்கப்பட வேண்டும்.

சவால் 3 

நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவின் பேட்டிங் பல முறை சொதப்பி இருக்கிறது. முக்கியமாக டாப் ஆர்டர் கடுமையாக ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த முறை அந்த தவறு நடக்காமல் பார்க்க வேண்டும்.

சவால் 4

செமி பைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் பட்சத்தில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆடும் விதமே வேறு மாதிரி இருக்கும்.

சவால் 5 

உலகக் கோப்பை போட்டி உள்ளிட்ட எந்த போட்டியிலும் இந்தியாவின் பிளேயிங் லெவன் சரியாக இருந்தது இல்லை. இந்த முறையாவது தற்போது உள்ள வெற்றி காம்பினேஷனை மாற்றாமல் இந்திய அணி ஆட வேண்டும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp