ஐஸ்வர்யா ராய் முதல் நயன்தாரா வரை : எந்த நடிகையின் திருமண உடை ரொம்ப விலை தெரியுமா? 

சினிமா நடிகர், நடிகை வீட்டு திருமணங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். தொழிலதிபர்களின் வீட்டு திருமண உடையில் தங்கம் வெள்ளி, வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் இருக்கும். 

ஐஸ்வர்யா ராய் முதல் நயன்தாரா வரை : எந்த நடிகையின் திருமண உடை ரொம்ப விலை தெரியுமா? 

இந்தியாவை பொருத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் வ்வொரு மாதிரியான திருமண முறை இருக்கிறது. ஒரு சிலரது சிம்பிளாக இருக்கும். ஒரு சிலரது ஆடம்பரமாக இருக்கும்.

பணக்காரர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களில் மேலும் ஆடம்பரத்தை கூட்டுவர். அதிலும் சிலர் நகைகளை விட திருமண உடைகளுக்குத்தான் அதிக பணத்தை செலவழிப்பார்கள். 

அதிலும் சினிமா நடிகர், நடிகை வீட்டு திருமணங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். தொழிலதிபர்களின் வீட்டு திருமண உடையில் தங்கம் வெள்ளி, வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் இருக்கும். 

அந்த வகையில் இதுவரை திருமணம் செய்து கொண்ட நடிகைகளில் ஒவ்வொருவருடைய திருமண உடை குறித்தும் அதன் விலை குறித்தும் பார்ப்போம்.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் திருமணம்

ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் ஆகியோர் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி திருமணம் நடந்தது. 

இதில் ஐஸ்வர்யாவின் திருமண உடையின் மதிப்பு மட்டும் ரூ 75 லட்சமாகும். நீதா லுல்லா என்ற உடை வடிவமைப்பாளர் உருவாக்கியிருந்தார். காஞ்சிபுரம் புடவையில் அழகிய தங்க பார்டர், தங்க நூல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஷில்பா ஷெட்டி திருமணம்

ஷில்பா ஷெட்டி, இவர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஷில்பா தனது திருமணத்தின் போது தருண் தஹிலியானி வடிவமைத்த சிகப்பு நிற புடவையை அணிந்திருந்தார். 

அதில் 8000 ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இந்த திருமண உடையை தயாரிக்க 50 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அனுஷ்கா ஷர்மா திருமணம்

அனுஷ்கா ஷர்மா  2017ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை திருமணம் செய்து கொண்டார். அவருடைய திருமணத்தில் அணிந்திருந்த லெஹங்காவின் விலை ரூ 30 லட்சமாகும். சில்வர் நிறத்தில் பீச் நிற பூக்கள் டிசைன் இருந்தது.

பிரியங்கா சோப்ராவின் திருமணம்

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி நடிகை பிரியங்கா சோப்ராவும் நடிகரும் பாடகருமான நிக் ஜோன்ஸும் திருமணம் செய்து கொண்டனர். 

இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இரு முறைகளில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் ரிசவ்ஷனின் போது அவர் சிவப்பு நிற லெஹங்கா அணிந்திருந்தார். அதன் விலை ரூ 13 லட்சமாகும்.

தீபிகா படுகோன் திருமணம்

தீபிகா படுகோன் ரன்வீர் சிங்கை மணந்தார். இவர்கள் இத்தாலியில் லேக் கோம்பாவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சிந்தி மற்றும் கொங்கனி முறைப்படி நடந்தது. தீபிகா படுகோன் அணிந்த லெஹங்காவின் விலை ரூ 13 லட்சம் என சொல்லப்படுகிறது.

ஆலியா பட் திருமணம்

ஆலியா பட் ரன்பீர் கபூரை மணந்தார். இவர்களுடைய திருமணத்தின்போது ஆலியா அணிந்திருந்த திருமண உடைதான் அனைவரையும் கவர்ந்தது. ஆலியா ஆர்கென்சா புடவை அணிந்திருந்தார். இதன் விலை ரூ 50 லட்சம் என்கிறார்கள்.

சோனம் கபூர் திருமணம்

அனில் கபூரின் மகள் சோனம் கபூர் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்டார். அதன் விலை ரூ 70 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்கிறார்கள். அத்துடன் அவர் அணிந்திருந்த நகைகளும் ரசிகர்களின் கண்களை பறித்தன.

நயன்தாரா திருமணம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. 

ஜேட் மோனிகா வடிவமைத்த வெர்மில்லியன் சிவப்பு நிற புடவையை அணிந்திருந்தார். முழுக்க எம்ப்ராய்டரி செய்யப்பட்ட இந்த புடவை பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் அதன் விலை ரூ 25 லட்சமாகும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp