இந்தியா - இலங்கை டி20 போட்டிகளை எந்த சேனலில் பார்ப்பது?
இலங்கை மற்றும் இந்தியா அணிக்கு இடையிலான டி20 தொடர் 27ஆம் தேதி பல்லேக மைதானத்தில் தொடங்குகிறது.
இலங்கை மற்றும் இந்தியா அணிக்கு இடையிலான டி20 தொடர் 27ஆம் தேதி பல்லேக மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், சூரிய குமார் யாதவ் தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது.
ஹர்திக் பாண்டியா, கில் உள்ளிட்ட வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளதுடன், முதல் முறையாக பயிற்சியாக கம்பீர் தலைமை தாங்கி உள்ளார்.
நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இலங்கை அணி முதல் சுற்றிலேயே வெளியேறியதை அடுத்து, கேப்டன் பதவியை ஹசரங்க ராஜினாமா செய்த நிலையில் தற்போது ஷரித் அசலங்க இலங்கை அணியின் டி20 கேப்டன் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் முடிந்துள்ள நிலையில், பெரும்பான்மையான இலங்கை அணி வீரர்கள் இந்த தொடரில் விளையாடி தற்போது நல்ல பார்மில் உள்ளனர். இதனால் இந்த தொடரில் வெற்றி பெற இந்திய அணி கடுமையாக போராட வேண்டி இருக்கும்.
முதல் டி20 போட்டி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுவதுடன், இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சிகளில் பார்க்கலாம் என்பதுடன், ஆன்லைனில் பார்க்க சோனி லிவ் ஆப்பை கட்டணம் செலுத்தி பயன்படுத்த முடியும்.
ஆனால் இந்த போட்டிகளை ஆன்லைனில் இலவசமாக பார்க்க ஜியோ டிவி ஆப்பில், sony சேனல்களை வைத்து நேரலையில் பார்க்கலாம்.