சுப்மன் கில்லுடன் டிசம்பரில் திருமணமா? ரகசியத்தை உடைத்த நடிகை!
சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கருடன் காதல் உறவில் இருப்பதாக பேச்சுகள் எழுந்தன.
இருந்தாலும் சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், இந்தி தொலைக்காட்சி நடிகை ரித்திமா பண்டிட்-ஐ டிசம்பர் மாதம் சுப்மன் கில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது.
இதுதொடர்பாக நடிகை ரித்திமா பண்டிட் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், சுப்மன் கில்லும் நானும் எந்த உறவிலும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், அவரை நான் சந்தித்ததே கிடையாது.
அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். ஒருவேளை நாங்கள் சந்தித்தால், இந்த விவகாரம் குறித்து சிரிப்போம் என்று நினைக்கிறேன். அதேபோல் சுப்மன் கில் ரொம்பவே க்யூட்.. ஆனால் எங்களுக்குள் எந்த உறவும் இல்லை.
யாரோ எழுதியதால் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. காலையில் இருந்து எனக்கு சில வாழ்த்து செய்திகள் கூட வரத் தொடங்கிவிட்டன.
இந்த வதந்தியை மறுத்தி சலிப்பு ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாகவே சோசியல் மீடியாவிலும் பதிவிடுகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே உள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.